வேணுகோபால் நேற்று கட்சிக்கு வந்தவர் : அவர் பிறக்கும்போதே நான் காங்கிரஸ்காரன் : கொந்தளிக்கிறார் மணிசங்கர் அய்யர்
நமது நிருபர்
கேசிவேணுகோபால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்; அவர் பிறக்கும் போதே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருக்கிறேன் என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
உங்களுடைய கருத்தை காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது வேணுகோபால் உள்ளிட்டோர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய பதில் வருமாறு :
கேசிவேணுகோபால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்; அவர் பிறக்கும் போதே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருக்கிறேன். அவர் யார் என்னை பற்றி இப்படி சொல்வதற்கு? அவர் ராஜியோட இருந்தாரா?
நான் ஐஎப்எஸ். ஆனாலும் நான் ராஜினாமா செய்து, ராஜிவ் உடன் பணியாற்றி, நான் அரசியலுக்கு அவருக்காக தான் வந்தேன். அவர் தவறி போனதற்கு ஒரே காரணம், நான். என்னை ஆதரிப்பதற்காக அவர் ஸ்ரீபெரும்புதூர் வர நேரத்தில் நான் மயிலாடுதுறையில் அவருக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.
கை விட்டுவிட்டார்கள்
அவர் வரவே இல்லை. அவர் இங்கே பழிக் கொலை நடந்து அவரால் வர முடியவில்லை. இப்பொழுது கே.சி.வேணுகோபால் யார்? அவரை ராகுல் பொதுச்செயலாளராக போட்டு இருக்கிறார். ராஜிவ் போட்டு இருப்பாரா? எதற்காக என்னை பிடித்து இப்படி அவமானம் செய்றது, எனக்கு 85 வயது. என்னை கண்டு எதற்காக அவங்களுக்கு இவ்வளவு பயம். என்னை பற்றி எதற்காக அவர்கள் இவ்வளவு பேசுகிறார்கள். என்னை கை விட்டுவிட்டார்கள். நான் எங்கேயும் இல்லை. யாரும் இல்லை.
வீணாய் திட்டினார்
இன்னைய தேதியில் என்னை நீங்கள் இங்கே கூப்பிட்டு இருக்கும் காரணம், வேணுகோபால் தானே, இல்லையென்றால் இன்னைக்கு என்னை கூப்பிட்டு இருப்பீர்களா. எதற்காக கடைசி நிமிடத்தில் என்னை கூப்பிட்டீர்கள். ஏனென்றால் வேணுகோபால் என்னை வீணாய் திட்டினார். அப்படி இருக்கும் சூழலில் ஏதோ எனக்கும் முக்கியத்துவம் உண்டு என்பது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. இல்லையென்றால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன். நல்லவேளை இந்த வேணுகோபால் காரணமாக நான் மீண்டும் இங்கே உருவாகி வந்து இருக்கிறேன், நன்றி. இவ்வாறு மணிசங்கர் ஐயர் பேசினார்.
Congress problem is that most of their so called leaders including General Secretaries will not be able to win a Lok Sabha or assembly seat on their own. They lack mass leaders and have just cronies to the first family of the party, which itself has lost its respect completely with large sections of the electorate.
So, media should not waste time on a party that does not know where they have to wear a shirt and where they have to pro in their undergarments.
சார் ,ஐய்யர் என்றாலே எங்கும் அலர்ஜி தாங்க.
இதுவரை உங்களது உழைப்புக்கு ஏற்ற பதவியோ மரியாதையோ எதுவும் கிடைத்ததாக எனக்கு தெரியவில்லை, உண்மைக்கு காலம் இல்லை சார், பேசாமல் ஒதுங்கி கிடக்கதான் வேண்டும்.
ஐயர் என்று தன் சமூகத்தை தன் பெயருக்கு பின் போட தகுதி இல்லாத மனிதர்
இவர் புலம்பட்டும். இவர் மீது சிறிது இரக்கம் கூட வரவில்லை. இவர் அப்போ பேசிய கொழுப்பு பேச்சு சாதாரணமானது அல்ல. மோடி வேணுமானால் பார்லிமெண்ட் கூடத்தில் டீ விற்பதற்கு தான் லாயக்கு ன்னு பேசினார். என்ன மாதிரியான கொழுப்பு இது?
பதவி பணத்திற்காக ஊருக்கு வரும் போது வேட்டியை கழற்றி வைத்து விட்டு வரும் கூட்டம். பாகிஸ்தானின் ஆத்ம நண்பன்.
டெண்டுல்கர் பிறப்பதற்கு முன்பே நான் உள்ளூரில் கிரிக்கெட் ஆடினேன் . என்னை டெஸ்ட் போட்டியில் சேர்க்கவில்லை என்று சொல்வது போல் அறிவிலிதனமாக இருக்கு . Senile dementia இவருக்கு.
பாகிஸ்தானுக்கு விலைபோனவர் எல்லாம் அறிவுரை கூறுகிறார்
ஏதோ வயதானத்தினால் உங்கள் மேலால் உள்ள மறியதைக்கு இவ்வளவு பேராசியும் உங்க்லிய்ய வெளியில் அனுப்ப வில்லை. ஏற்காதோ காங்கரஸ் பென்ஷன் கொடுக்குது, அதோட நீங்க பழைய கனவுகளில் காலம் தள்ள வேண்டியது தானெ ராஜீவ் இருந்திருந்தாலும் ராஜீவைய்ய தலைவராக்கி ஒதுங்க்கி இருப்பார். அந்த நினைப்பு வரவில்லையா உங்களுக்கு.
அது சரி. உங்க்ளுக்கு உள்ள குமுறலின் வெளி பாடு7 என்பது அறிந்ததெ. முதிர்ந்த தேங்காய் சட்டினி அரைக்க உதவாது என்பார்கள். உங்களையும் ராகுலு அந்த லிஸ்டில் வைத்துள்ளார் என்ற குமுறல் உங்களுக்கு. அதின் வெளிபாடே இந்த குமுறல்
இவருடைய பெயரை விளம்பரப்படுத்துவதற்காக அடிக்கடி பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.மேலும்
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா
-
நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் கோரத்தாண்டவம்; அவசரநிலை பிரகடனம்
-
தமிழக அமைச்சரவை கூட்டம்: 46 முதலீடுகளுக்கு ஒப்புதல்
-
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு
-
ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்