சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது

19


பல்லியா: உத்திரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி., மாநிலம் சிக்கந்தர்பூர் நகரின் ஜல்பா சவுக்கைச் சேர்ந்த கவுதம் கவுர், புகாரின் பேரில் பாட்னாவின் புதிய பாடலிபுத்ரா காலனியைச் சேர்ந்த ஜோஸ் தாமஸ் 47, மீது நேற்று(பிப்ரவரி22) இரவு மாநில சட்டவிரோத மதமாற்றத் தடைச்சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பாதிரியார் ஜோஸ் தாமஸ்,ஏழை எளிய மக்களுக்குப் பணம், வேலைவாய்ப்பு அல்லது நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி மதமாற்றம் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களை மதமாற்றம், பணம், வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து மதமாற்றத்தைத் தூண்டி, மத உணர்வுகளைப் புண்படுத்திய பாதிரியாரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்.


இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

Advertisement