மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்

மாஸ்கோ: உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் ஓயவில்லை. இருநாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. போரை நிறுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் இருநாடுகள் இடையேயான தாக்குதல் ஓயவில்லை.

இந் நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்த, அதில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து பதில் நடவடிக்கையில் இறங்கிய உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் மாஸ்கோ மீது ட்ரோன்களை வீசி தாக்குதலை தொடர்ந்தது.

குறிப்பாக தலைநகர் மாஸ்கோ நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. டோமோடெட்வோ, வினுகோவா, ஜூகோவ்ஸ்கி, செர்மெட்யோவா ஆகிய முக்கிய 4 முக்கிய விமானங்களிலும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு காரணமாக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்யாவின் விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Advertisement