அமைச்சர் சுப்பிரமணியன் 'அட்மிட்'

2

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து, அன்றைய தினமே, வீடு திரும்பி, ஓய்வில் இருந்து வந்தார். ஆனாலும், காய்ச்சல் தொடர்ந்ததால், நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement