யாருடன் கூட்டணி? ராமதாஸ் நாளை முடிவு
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடக்கவுள்ளது.
'அதில், தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்' என கூறியுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளார். ஆனால், ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வால், எந்தக் கூட்டணியிலும் சேர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின், கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை, ராமதாஸ் வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (1)
சுல்தான் - ,
25 பிப்,2026 - 04:47 Report Abuse
குடும்ப உறுப்பினர்களுடன் தான். இல்லாவிட்டால் ஸ்வீட் பாக்ஸ் உடன் தான் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement