காங்.,கிற்கு 27 பிளஸ் 1 கொடுக்க தி.மு.க., திட்டம்
'சட்டசபை தேர்தலில், 27 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும். இதுவே இறுதி வாய்ப்பு' என, தமிழக காங்கிரசுக்கு, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், வேணுகோபால் டில்லி திரும்பி விட்டார். இதையடுத்து, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, 41 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு, 27 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் ஒதுக்க முதல்வர் முன்வந்திருப்பதாக கனிமொழி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், 'கடந்த 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒன்பது தொகுதிகளிலும் அக்கட்சி, வெற்றி பெற்றது. வரும் சட்டசபை தேர்தலில், ஒன்பது லோக்சபா தொகுதிகளுக்கு தலா மூன்று சட்டசபை தொகுதிகள் வீதம், 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதுவே இறுதி வாய்ப்பு; அதை ஏற்று உடன்பாட்டுக்கு வருமாறு தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது' என்றனர்.
- நமது நிருபர் -
காங்கிரஸ் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். ஆறு நூற்றாண்டுகள் வளைந்து குனிந்து நின்றதால் காங்கிரஸால் இப்போது நிமிர முடியவில்லை. இப்போது இல்லை என்றால் எப்போது எனும் காலகட்டத்தில் நிற்கிறது காங்கிரஸ். மாணிக்கம் தாகூர் போன்ற நிர்வாகிகளுக்கு உள்ள ரோஷம் கூட தலைமைக்கு இல்லை. காங்கிரஸ் மன்னர் ஆட்சியை விடுத்து திறமைக்கு வாய்ப்பு என்றால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். மோடிஜியை வசை பாடுவதிலேயே நேரத்தை வீணடித்தால் எந்த காலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை பற்றி நினைக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இருந்தது என்பதை காங்கிரஸ் நினைவு கூற வேண்டும்.
காங்கிரஸ் குறைந்தது 80 சீட்டு கேட்கலாம்.
ஹாஹாஹாமேலும்
-
அமெரிக்காவை அச்சுறுத்தும் பாம் சூறாவளி; 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எங்களுக்கு ராஜ்ஜியம்... உங்களுக்கு தான் பூஜ்ஜியம்; முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி
-
நேரு மீது வழக்கு பதியாவிட்டால் சி.பி.ஐ., விசாரணை கோருவோம் : லஞ்ச ஒழிப்பு துறைக்கு அ.தி.மு.க., கடிதம்
-
இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்
-
அனில் அம்பானியின் ரூ.3716 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
சைவம், வைணவம் குறித்து ஆபாச பேச்சு; மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு