இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்: உடல் மருத்துவமனைக்கு தானம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று( பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101. அவர் விரும்பியபடி, சென்னை மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அவரது உடல் நாளை ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது 101. வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த பிப்.,1 ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அஞ்சலி
அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 5 மணி வரை அவரது உடல் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். நல்லகண்ணு மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி 7 நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், 2016ல் நல்லகண்ணு, தன் உடலை மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக, சென்னை மருத்துவ கல்லுாரிக்கு எழுதி கொடுத்திருந்தார். அவர் விரும்பியபடி, சென்னை மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அவரது உடலை தானம் செய்ய, குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
எனவே, தி.நகரில் இருந்து, அவரது உடல் பேரணியாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை மருத்துவ கல்லுாரிக்கு, நாளை முறைப்படி வழங்கப்பட உள்ளது.block_B
முதல்வர் அஞ்சலி
கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்தார்.
வரலாறு
பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் 1925 டிச.,26 ல் ராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு 3வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலையில் பள்ளியில் படித்த போது, பள்ளி ஆசிரியர் மூலம் பொது உடமைக் கருத்துகள் அறிமுகமானது.
@block_B@18 வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவருக்கு கிளைச்செயலாளர் பதவி கிடைத்தது.பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை செய்யப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு 1958 ம் ஆண்டு ரஞ்சிதம் என்பவரை நல்லகண்ணு திருமணம் செய்து கொண்டார்.block_B
25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகள் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமை, கனிம வளக்கொள்கை்கு எதிரான போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளார்.
@block_Y@80வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசூலித்து கொடுத்தது. அதனை கட்சிக்கே திருப்பி கொடுத்தார். தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
block_Y
மதுரையில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதனை எதிர்த்து, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவராக இருந்த நல்லகண்ணு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
@quote@2010ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்த ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நல்லகண்ணு நேரில் ஆஜராகி வாதாடினார்.
quote
@block_G@
1999 லோக்சபா தேர்தலில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டு பாஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.block_G
@block_P@
2007 ஆக.,14ல் சகாயோகி விருதை அப்போதைய கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் இருந்து வாங்கினார்.
2007 ல் அம்பேத்கர் விருது
மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது( 2009 ஜன.,21)
தகைசால் தமிழர் விருது(2022)
ஆகியன நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.block_P
இப்படியும் நேர்மையாக அரசியலில் வாழ முடியும் என வாழ்ந்து காட்டி உடன் வழி காட்டும்
மகா நல்ல மா மனிதர்
நல்ல மனிதர் .... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .... ஒரே குறை மக்களுக்காக தன் வாழ்க்கை முழுவதும் போராடிய அவருக்கு மக்கள் போதிய ஆதரவு கொடுக்கவில்லை !!!
செஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா தோழா
வஞ்சகம் கட்சியடா தோழா
வஞ்சகம் கட்சிதானாடா
நல் உறக்கம் கொள்வாயடா தோழா.
அடப்பாவமே உடல் மருத்துவத்திற்கு தானமா? கழக கட்சி தலைவர்களுக்கு மட்டும் தான் மெரீனாவா ? நல்லவர்களுக்கு அங்கு இடமில்லையா? இறைவன் பார்த்து கொள்வான்
ஓம் சாந்தி
பெயர்கேற்றாற் போல் நல்ல மனிதர்..
.ஆனால் திராவிட கட்சிகளின் ஆட்சி அலங்கோலத்தால் ₹ 10.75 லட்சம் கோடியில் இறப்பவர்கள் அனைவரும் ரூபாய் 2.75 லட்சம் கடனாளியாக இறக்கின்றனர்..
.நல்லகண்ணும் அதில் ஓருவர்.
இவரது நன்றாக் இருந்த காலத்தில்தான் ரு 25 கோடி விலை கொடுத்து திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அடிமை படுத்தியது
அன்னாரின் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாறட்டும் என்பது நமது சனாதன கோட்பாட்டின்படி வேண்டிக்கொள்வது.
பிஜேபியில் இருந்திருந்தால், முதல்வர் ஆகி இருப்பார். வீணாபோன கட்சியில் இருந்ததால், கவுன்சிலர் கூட ஆகமுடியவில்லை .
Last politician don't know how to make money in politics.
கல்லறையா விறகா ?
neither..body donated.unakku kerosin thaan sari!மேலும்
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
-
உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா - ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்