முன்னாள் அமைச்சர் மல்லாடிக்கு காங்., துணை தலைவர் கண்டனம்
புதுச்சேரி: காங்., தலைவருக்கு எதிராக ஏனாம் மக்களை துாண்டி விடுவதாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி காங்., தலைவர்வைத்திலிங்கத்தை, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது. ஏனாமில் காங்., பாதயாத்திரை வெற்றிகரமாக நடந்தபோது, சிறிய கிராமப்பகுதியில் மல்லாடி கிருஷ்ணராவ், மக்களைத் துாண்டி எதிர்ப்பு நாடகத்தை நடத்தியுள்ளார்.இது ஏற்கத்தக்கதல்ல.
காஸ் பைப் விபத்து தொடர்பான உண்மையை மறைத்து, மக்களை தவறாக வழி நடத்துவது ஏற்க முடியாதது.
காங்., கட்சி வழங்கிய அரசியல் வாய்ப்புகள் மூலம் உயர்ந்த நிலையில் சென்று, இன்று குறை கூறுவது பொருத்தமற்ற செயல். உங்களுக்காகஅமைச்சர் பதவியை துறந்து கட்சியின் நலனுக்காக சபாநாயகர் பதவியை ஏற்ற பெருந்தன்மை கொண்டவரை, நினைவில் கொள்ளாமல் பேசுவது சரியல்ல.
சமூக நல அக்கறை கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தை தரக்குறைவாக பேசுவது அரசியல் நாகரிகத்திற்கும், பொதுமக்களின் உணர்வுகளுக்கும் எதிரானது.
எனவே, ஏனாம் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய அரசியல் பணிகளைச் செய்யுங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மக்களைத் துாண்டுவதை உடனே நிறுத்துங்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
-
உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா - ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்