கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

சங்க மாநில தலைவர் விசுவநாதன், மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினர். மாநில துணைத் தலைவர்கள் பாலன், ராஜகுமாரி, முத்துவேல், செயலாளர்கள் ராமு, அன்பழகன், பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் அந்தோணி துவக்கி வைத்து பேசினார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில துணைத் தலைவர் மோதிலால் கண்டன உரை ஆற்றினர். போராட்டத்தில், கட்டட தொழிலாளர் நல வாரியத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும். கட்டட தொழிலாளர் அனைவருக்கும் இ.எஸ்.ஐ., - பி.எப்., சட்டத்தை அமலாக்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement