புழுதி பறக்கும் சாலை வாகன ஓட்டிகள் சிரமம்
செ ன்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு சாலை சந்திப்பு உள்ளது.
இங்கிருந்து பிரியும் இணைப்பு சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், போக்குவரத்து துறையின் ஓட்டுநர் பயிற்சி பிரிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் சிந்தலகுப்பம் கிராமம் செல்ல வேண்டும்.
இந்த இணைப்பு சாலை வழியாக, தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான நிலக்கரி லாரிகள் சென்று வருகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், இணைப்பு சாலை பழுதடைந்து, புழுதி பறக்கிறது.
இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், அங்கு வசிக்கும் மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இணைப்பு சாலையை தரமாக அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜெகதீஷ்,
கும்மிடிப்பூண்டி.
மேலும்
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
-
உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா - ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்