டில்லி சிறப்பு பிரதிநிதியுடன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உடன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், வர்த்தக சங்கத்தினர், பசுமை மன்றம் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில், தமிழக அரசின் ஆவணங்களில் பட்டாசு தொழிலை அருவருக்கத்தக்க மற்றும் அபாயகரமான தொழில் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி இல்லை. ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் பட்டாசினை வெள்ளை பிரிவில் சேர்க்க வேண்டும். கல்லுாரிகளில் மட்டுமாவது பட்டாசு குறித்து பாடப் பிரிவை சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகைளை வைத்தனர். மேஜர் சங்கீதா, மாநகர செயலாளர் உதயசூரியன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement