கட்சி தலைவர்கள் படங்களுடன் 'டி-சர்ட்' உடனடி டெலிவரிக்கு திருப்பூர் ஆயத்தம்
திருப்பூர்: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரசார கூட்டங்களுக்காக, கட்சி தலைவர், கொடி, சின்னம் அச்சிடப்பட்ட 'டி-சர்ட்' உற்பத்தி திருப்பூரில் துவங்கியுள்ளது.
தேர்தல் காலத்தில், கட்சி சின்னம், தலைவர் படங்கள், கொடி ஆகியவை அச்சிடப்பட்ட 'டி-சர்ட்' மற்றும் தொப்பி, கட்சி சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல்கால விற்பனைக்காக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தயாராகிவிட்டனர். சிறிய கட்சி முதல், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி வரை, அனைத்து கட்சிகளுக்குமான 'டி-சர்ட்' தயாரிப்புக்கும் ஆயத்தமாகியுள்ளனர். முதல்கட்டமாக, 'சாம்பிள் டி-சர்ட்'கள் தயாரித்து காட்சிப்படுத்தி, தற்போதிருந்தே வியாபார பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர்.
தேர்தல் கமிஷனின் செலவு கெடுபிடிகளுக்கு மத்தியில், குறைந்த செலவில், 'டி-சர்ட்' தயாரித்து, செலவை குறைத்து வழங்கவும் உற்பத்தியாளர் தயாராகி வருகின்றனர்.
பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறுகையில்,' சமீபமாக, கட்சி மாநாடுகளை முன்னிட்டு, 'டி-சர்ட்' ஆர்டர்கள் அதிகம் கிடைக்கின்றன. தேர்தல்கால பிரசாரத்துக்காகவும், 'டி-சர்ட்' கொள்முதல் நடக்கும். அதற்காக, 'எல்', 'எம்', 'எஸ்' மற்றும் 'எக்ஸ் எல்' ஆகிய அளவுகளில், 'டி-சர்ட்' தயாரிக்கிறோம். காலர் 'டி-சர்ட்' மற்றும் காலர் இல்லாத 'ரிப்நெக்' டி-சர்ட்டை கட்சியினர் கேட்கின்றனர். தலைவர்கள் படம், கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி அச்சிடப்பட்ட 'டி-சர்ட்'கள் தயாராக உள்ளன.
ஒரு டி-சர்ட் விலை குறைந்தபட்சம் ரூ. 60 முதல் அதிகபட்சம் ரூ.100 வரை இருக்கும். கேட்கும் வண்ணத்தில் 'டி-சர்ட்' தயாரித்து, ஐந்து நாள் முதல் ஒரு வாரத்தில் டெலிவரி கொடுத்துவிடுவோம்,' என்றனர்.
மேலும்
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
-
உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா - ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்