கோவையில் முதல்வர் ஸ்டாலின்; திமுகவினர் உற்சாக வரவேற்பு
கோவை: பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக மாநாட்டில் பங்கேற்க கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள திமுகவின் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடக்கிறது. இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அண்மையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார். அவரது பெற்றோரான கோவை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு - சுகன்யா ஆகியோரை சந்தித்து சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது, உறுப்பு தானம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதன்பிறகு, கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, போத்தனூர் செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய அவர், பெண் தொண்டர்களுக்கு கைகொடுத்து, அவர்களுடன் கலந்துரையாடினார். போத்தனூர் பகுதியில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடும் அறிவு இல்லாத மக்கள் இருக்கும்வரை இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் வாழ்க்கை எப்போதும் கொண்டாட்டம்தான்
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையை மட்டும் முதல்வர் ஆய்வு செய்ய மாட்டார்
இருந்தால் தானே செய்வதற்கு?
வானதி கலந்துக்கலயா ?
இனிமேல் ஸ்டாலினிடமிருந்து நவரச நடிப்பை காணலாம். விதவிதமான முக பாவனையில் இரண்டு மூன்று வரிகளில் பேசி விடுவார்.
எத்தனை அண்ணாமலைகளும்... ஷாக்களும், எடப்பாடிகளும் வந்தாலும்... இவர்கிட்ட நெருக்கவே முடியாது... பார்த்துங்கோங்க... போனது ஒரு கட்சி நிகழ்ச்சி... ஒருத்தர் வீட்டுக்கு நேரா போய் துக்கம் விசாரிச்சிருக்கிறார் முதலமைச்சர்...
அப்போ எல்லாமே ஒரு செட்டப் சொல்றியே கானோஜ்
பிண அரசியல் திருட்டு திமுக நல்ல பண்ணுவாங்க. போன ஆட்சில அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க னு ஒருத்தர் வாய் கிழிய பேசுனாரு..
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது...
துக்க வீட்டிலேயும் ஷூட்டிங்கா? கொடுமை.
கனோஜால் மும்பையில் பாஜகவை தடுக்க முடியவில்லை.மேலும்
-
கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
வரியின்றி அமெரிக்காவுக்கு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு: துணை ஜனாதிபதி நம்பிக்கை
-
வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் பாதிப்பு
-
ராஜஸ்தானில் சொகுசு பஸ்-டிரக் லாரி மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலி
-
டில்லியில் செய்தது போன்று இங்கும் செய்ய நினைக்கின்றனர்: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு