சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கோல்கட்டா; சாலைகளில் ஓடிய மக்கள்

7

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் திரண்டனர்.



மேற்கு வங்கத்தின் பிற பகுதிகள் மற்றும் கோல்கட்டாவில் நண்பகல் 1.22 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகள் கூறினர். வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 188 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளிலும், அலுவலகத்தில் இருப்பவர்களும் பீதி அடைந்து சாலைகளில் திரண்டனர். சமூக வலைதளங்களில் பலரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குறிப்பிட்டு உள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் குலுங்கியதாக வீடியோக்களையும் அவர்கள் பதிவிட்டு உள்ளனர்.


இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக என்ற தகவலும் வெளியாகவில்லை. கோல்கட்டாவில் இம்மாதத்தில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படுவது இது 2வது முறையாகும். பிப்.3ம் தேதி இதேபோன்றதொரு நிலநடுக்கம் கோல்கட்டாவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Advertisement