கல்லலில் இன்று மாசி தேரோட்டம்
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இவ்வாண்டு திருவிழா பிப்.21 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், பூத, சிம்ம, காமதேனு, குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
நேற்று திருக் கல்யாணமும், குன்னமாகாளி அம்மன் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் தேருக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 4:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடைபெறுகிறது. நாளை தீர்த்தவாரி, சப்தாவரணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
Advertisement
Advertisement