ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
ஜெரூசலம்: அடுத்து வரும் நாட்களில் ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்க படைகளின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளரும், மதகுருவான கமேனி கொல்லப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் ராணுவமும் வெளியிட்டு உள்ளது. கமேனி இறப்பை முதலில் மறுத்த ஈரானும் பின்னர் அதை ஒப்புக் கொண்டது.
இந் நிலையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் விடியோ ஒன்றை வெளியிட்டு பேசி உள்ளார். அந்த விடியோவில் கூறி உள்ளதாவது;
ஈரான் நாட்டு மக்கள் கொடுங்கோன்மையின் தொடர்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் சூழலை நாங்கள் உருவாக்குவோம். ஈரான் மக்கள் இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருமுறை மட்டுமே இப்படிப்பட்ட வாய்ப்பு கிட்டும்.
உங்களுக்கான தருணம் வெகு விரைவில் வரும். உங்களின் வாழ்க்கை சூழலை கசப்பாக்கிய ஆட்சியை வீழ்த்த வீதிக்கு வரவேண்டிய தருணம். உங்களின் துன்பங்கள், தியாகங்கள் வீண் போகாது. நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவி வந்துவிட்டது. வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் இது.
ஈரான் நாட்டு குடிக்களே, ஆட்சியை தூக்கி எறிந்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க உங்களின் படைகளை ஒன்றிணைக்க வேண்டிய தருணம்.
இவ்வாறு விடியோவில் நெதன்யாகு பேசி உள்ளார்.
வாசகர் கருத்து (2)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
01 மார்,2026 - 18:55 Report Abuse
பார்த்து சூதனமா நடந்துக்கோங்க நோபல் பரிசுக்கு அலையும் ஒருத்தன் நீங்க தீவிரவாதிகளை அழிக்கும் நேரத்தில் வந்து செய்யாதீங்க என்று தடுக்கும் வாய்ப்பு அதிகம் 0
0
Reply
GMM - KA,இந்தியா
01 மார்,2026 - 17:46 Report Abuse
உலகில் சட்ட விரோத ஆயுத குழுக்கள் அங்குள்ள அரசிடம் சரணடைய வேண்டும். பாகிஸ்தான் போன்ற அரசே பயங்கர வாதத்தில் இணைந்தால், அந்த நாடு அருகில் உள்ள நாட்டுடன் இணைக்க வேண்டும். அல்லது இவைகள் அழித்து ஒழிக்க பட வேண்டும். பயங்கர வாத ஒழிப்பு தலைமை இஸ்ரேல். அமைதி, வளர்ச்சி விரும்பும் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கர வாதம் பற்றி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தனக்கு ஆபத்து விளைவிக்க முடியாது என்ற மதிப்பீடு தவறு. இந்தியா மீண்டது போல் நீங்கள் மீள முடியாது. 0
0
Reply
மேலும்
-
ஈரானுக்கு சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகள் ஆதரவு; இறையாண்மை மீறிய தாக்குதல் எனவும் கண்டிப்பு
-
ஈரான் நாட்டு போர் விமானங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
-
ஈரான் பதில் தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் பலி
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை
-
திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி
-
மத்திய கிழக்கில் தொடரும் போர்; ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
Advertisement
Advertisement