சேதமடைந்த தார்ச்சாலை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை


அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, ராஜபுரம் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளதாக, நமது நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.


அ ரவக்குறிச்சியில் இருந்து, ராஜபுரம் செல்லும் சாலையில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பறிக்கப்பட்ட குழிகள் மூடப்பட்டு, சாலை பராமரிப்பு செய்யப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக பள்ளம் ஏற்பட்டு கடுமையாக சேதமடைந்தது. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.


இது தொடர்பான செய்தி, படத்துடன் நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சாலையை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். சாலையை உடனடியாக சீரமைத்து கொடுத்த, நெடுஞ்சாலை துறையினரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement