வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

கரூர்: கரூர் அருகே, வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் தினேஷ், 29; மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்துள்ளார். வெல்டர் வேலை செய்து வந்தார்.


இந்நிலையில், உரிய வேலை கிடைக்காததால் மனம் உடைந்த தினேஷ் கடந்த, 24ல் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். பிறகு, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தினேஷ் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement