அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்
சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள அரசினர் மகளிர் கல்லுாரியில், 24வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் காந்திமதி வரவேற்றார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, இளநிலை பிரிவில், 738 மாணவியர், முதுநிலை பிரிவில், 232 மாணவியர் என, 970 பேருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். இளநிலை பொருளாதாரம், புள்ளியியலில் தலா, 2 பேர், முதுநிலை வரலாற்று பாடத்தில், 5, பொருளாதாரத்தில், 4, நுண்ணுயிரியலில், 2 என, 15 மாணவியர், பல்கலை தரவரிசை பட்டியலில் இடம்பெற்று, தனி பரிசு, துறை சார்ந்த பரிசுகள் பெற்றனர்.
தொடர்ந்து ராமலட்சுமி பேசுகையில், ''பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எனும் பாரதியின் பாடலுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் மாணவியரும் சட்டங்களை உருவாக்க முடியும். அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு சமுதாயப்பணி ஆற்றுங்கள்,'' என்றார்.அனைத்து துறை பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்