குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு தலைவி அறிவுரை

சேலம்: குழந்தை தொழிலாளரை ஒழித்தல் தொடர்பாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவி விஜயா தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகளின் உரிமை மீறல்களை தடுத்து பாதுகாப்பது, வழக்குகளை விசாரித்தல், உரிமையியல் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரத்தை ஆணையம் பெற்றுள்ளது.


அதனால் போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட பிற அலுவலகத்தில் இருந்து, உரிய ஆவணங்களை பெற்று குழந்தைகளுக்கு எதிரான குற்றம், உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை துரிதமாக விசாரிக்க, குழந்தை நீதிமன்றங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை
களுக்கு உரிய நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


கலெக்டர் பிருந்தாதேவி, ஆணைய உறுப்பினர் கசிமீர்ராஜ், மாவட்ட குழந்தை
கள் பாதுகாப்பு அலுவலர் முரளி, குழந்தைகள் நலக்குழு தலைவர் எழில் உள்பட இணைப்புத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement