திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்
புதுடில்லி: 'திமுக அளிக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல' என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார்.
திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்று மல்லுக்கட்டும் காங்கிரஸ், திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந் நிலையில், புதுடில்லியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
எங்கள் குழுவினரும், திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரும் நேற்று 1 மணி நேரம் விவாதித்தனர். நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.
தற்போது, எங்களின் கவனம் எல்லாம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி உள்ளது. சட்டமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அவர்கள் (திமுக) முடிவு செய்த 25 தொகுதிகளை எங்களுக்கு அளிக்க முன் வந்தனர். அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் தந்துள்ளோம்.
தவெக ஒரு புதிய கட்சி. அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்களின் ஈர்ப்பு அந்த கட்சிக்கு இருக்கிறது. மேலும் அவர்கள் எங்கள் பலத்தையும், ராகுல் பலத்தையும் அறிந்தவர்கள் என்றார். அவரிடம் தவெகவுடன் கூட்டணி என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் நாங்கள் வழங்கி இருக்கிறோம் என்றார்.
வாசகர் கருத்து (12)
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
01 மார்,2026 - 20:59 Report Abuse
காங்கிரஸ் தனித்து போட்டி இட்டு தன் கொள்ளகைகளை மது வவிலக்கு என்று கூறி வாக்கு சதா விதத்தை அதிகஸ்ரீது கொண்டல் அடுத்த முறை வெற்றி நிச்சயம் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
01 மார்,2026 - 20:10 Report Abuse
அப்ப டிவிகே கூட பயணிக்கலாமே ???? 0
0
Reply
SULLAN - chennai,இந்தியா
01 மார்,2026 - 20:10 Report Abuse
விசய் கட்சி பேர சொல்லியா பேரம் பேசுறீங்க?? சோடாங்கர் உங்க ரீலு அருந்து போச்சு?? கொடுக்குறத வாங்கிகிட்டு போர்றதுதான் உங்களுக்கு மரியாதை?? 0
0
vivek - ,
01 மார்,2026 - 21:45Report Abuse
சுள்ளான் மாதிரி யாரும் அடிமை இல்லிங்கோ 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
01 மார்,2026 - 19:49 Report Abuse
என்னடி இப்படி இழுத்துகிட்டே இருக்குது என என் மவன் என்ற படத்தில் ராணி சோமநாதன் என்ற பழம் பெரு நடிகை ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் நினைவிக்கு வருகிறது 0
0
Reply
ஆரூர் ரங் - ,
01 மார்,2026 - 19:49 Report Abuse
இதுவாவது கிடைத்ததற்கு மகிழ்ச்சியடையவும். 20 க்கு மேல் நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப பிகு பண்ணி வற்புறுத்தினா திர்ஷா கட்சி கூட்டணிக்கு போங்கன்னு விரட்டிவிடுவாங்க. உள்ளதும் போகும். 0
0
Reply
iyer folsom - ,இந்தியா
01 மார்,2026 - 19:26 Report Abuse
சுய மரியாதை வேண்டும் காங்கிரஸ் வேண்டாம் இந்த உறவு. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
01 மார்,2026 - 18:53 Report Abuse
அடுத்த செய்தி. செல்வபெருந்தகை திருடர்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் 0
0
duruvasar - indraprastham,இந்தியா
01 மார்,2026 - 19:51Report Abuse
நடக்காது. அதற்க்கு எதிர்பாராத பெரும்தொகையை திமுக கொடுக்கவேண்டியிருக்கும். முதலில் சேரும் வாய்ப்பு திருமாவுக்குத்தான் அதிகம். 0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
01 மார்,2026 - 20:04Report Abuse
மிகப்பழைய செய்தி 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
01 மார்,2026 - 18:39 Report Abuse
காங். இரட்டை குதிரையில் சவாரி செய்ய நினைக்கிறு! 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
01 மார்,2026 - 19:43Report Abuse
சரிதான். திருட்டு தீயமுக 18 குதிரைகளில் சவாரி செய்யுது. இரட்டை குதிரை ஒண்ணுமே இல்லை. இதெல்லாம் ஜுஜுபி. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement