இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஈரானின் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலடி நிச்சயம் உண்டு என ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் எனவும் கூறியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்குப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை(ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. இதன் பிறகு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் அந்த படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது 3வது நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக ஈரான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (1)
N.Purushothaman - Cuddalore,இந்தியா
02 மார்,2026 - 20:16 Report Abuse
நெதன்யாஹு தேவையில்லாத வேலையை செய்து கொண்டு இருக்கிறார் ... 0
0
Reply
மேலும்
-
எரிவாயு உற்பத்தி நிறுத்தம்: மத்தியக் கிழக்கில் போர் எதிரொலி
-
மஹாராஷ்டிராவில் விஷவாயு கசிவு: மக்கள் அச்சம்
-
குடும்பச்சூழல் பற்றி கேட்டறிந்த பிரதமர் மோடி: மதுரை பூரணச்சந்திரன் மனைவி உருக்கம்
-
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; மார்ச் 23ல் வெளியாகிறது தீர்ப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் புதுமண்டபம் புனரமைப்பு2026 செப்டம்பர் வரை அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு
-
தொடரும் போர் பதட்டம்; சவுதி இளவரசர், பஹ்ரைன் மன்னருடன் மோடி போனில் பேச்சு
Advertisement
Advertisement