மஹாராஷ்டிராவில் விஷவாயு கசிவு: மக்கள் அச்சம்

மும்பை: மஹாராஷ்டிராவில், ஓலியம் எனப்படும் புகையும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கசிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.


மஹாராஷ்டிராவின் பல்ஹர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை வழித்தடத்தில் உள்ள ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் ஓலியம் எனப்படும் ரசாயனம் கசிந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இடையே பயம் உண்டானது. உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அவசர கால சேவைபடையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement