மதுரை மீனாட்சி அம்மன்கோவில் புதுமண்டபம் புனரமைப்பு2026 செப்டம்பர் வரை அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, 2026 செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் புதுமண்டபம் புனரமைப்பு பணியை முடிக்க அவகாசம் தேவை என கோவில் தரப்பில் ஐகோர்ட் மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.
மதுரை மணிபாரதி ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் புதுமண்டபத்தை புனரமைப்பதற்காக அங்கிருந்த கடைகள் குன்னத்துார் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. மண்டபத்தை புனரமைக்கவில்லை. புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த, 2024 ஜூலை19ல் விசாரணையின்போது அரசு தரப்பு: அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுடன் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. திட்ட மதிப்பு, ஒரு கோடியே 50 லட்சம். இத்திருப்பணியை நன்கொடை அடிப்படையில், ஒரு கோடியே 50 லட்சத்தில் செய்துதர மதுரை செல்லுார் ராஜேந்திரன் முன்வந்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த இரு நீதிபதிகள் அமர்வு, 'புனரமைப்பு பணியை, 2024 டிச., 31க்குள் முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
கடந்த, 2025ல் மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர், '2026 பிப்., 28 வரை அவகாசம் தேவை' என மனு செய்தார். அவகாசம் அளிக்கப்பட்டது.
கோவில் செயல் அலுவலர், 'மேலும், 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்' என மீண்டும் மனு செய்தார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
கோவில் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், 'பழமையான துாண்களில் மிக நுட்பமாக, கவனமாக புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் புதுமண்டப புனரமைப்பு பணியை முடித்துவிடுவோம்' என்றார்.
நீதிபதிகள், 'செப்டம்பர்வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என உத்தரவிட்டனர்.
மேலும்
-
வெளிநாட்டு மணலுக்கு இறக்குமதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
-
மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
-
சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த போலீஸ் துறை தயார்: நமச்சிவாயம்
-
அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்
-
சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த கோரி மக்கள் மனு
-
சாலையோரத்தில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு