அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்

10


நியூயார்க்: ஈரானுக்கு எதிரான போர் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். போர் நடவடிக்கையில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் அறிவித்துள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்தி உள்ளன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல்களில இறங்கி உள்ளது. இதன் நீட்சியாக மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் சூழலில் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந் நிலையில், போர் ஒரு மாதம் வரை கூட நீடிக்கலாம் என்று அமரிக்க அதிபர் டிரம்ப் கணித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல. எங்களின் இலக்குகள் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது. இந்த போரானது கிட்டத்தட்ட 4 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம்.

அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானவை, அது தவிர்க்க முடியாததும் கூட. இந்த தாக்குதல்கள் தொடரும். ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல். எனவே இந்த தாக்குதல் அவசியமானது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

போரானது 4 வாரங்கள் வரை கூட நீடிக்கும் என்று டிரம்ப் கணித்துள்ள அதே தருணத்தில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் கைகோர்த்து செயல்பட தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் தெரிவித்துள்ளன. தங்களின் சொந்த நலன்கள், நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க தயாராக உள்ளதாகவும் கூறி உள்ளன.

Advertisement