எச்சரிக்கையை புறக்கணித்து அணு ஆயுதங்களை தயாரித்த ஈரான்: டிரம்ப்
வாஷிங்டன்:'' அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானால் அணு ஆயுதங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: அணுஆயுத கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்தக்கூடாது என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் அதனை புறக்கணித்து, அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஐரோப்பாவையும், வெளிநாடுகளில் அமெரிக்கா தளங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பெற்று இருந்தனர். விரைவில், அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அவர்களுக்கு கிடைத்து இருக்கும். தீய ஆட்சியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்துவதற்கும் அமெரிக்காவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. அதனை செய்து கொண்டு இருக்கிறோம்.
ஈரானுக்கு எதிரான போரில் எங்களின் கணிப்புகளை விட அமெரிக்கா முன்னேறி உள்ளது. 4 அல்லது 5 வாரங்களில் போர் முடியும் என திட்டமிட்டோம். அதனையும் தாண்டி போர் நீடித்தால் அதனை செய்யும் வலிமை உள்ளது. அதனை செய்வோம். எங்களின் நோக்கம் தெளிவாகஉள்ளது. முதலில் ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்க வேண்டியது. அதனை செய்துவிட்டோம். அடுத்தது அவர்களின் கடற்படையை அழிக்க வேண்டியது. ஏற்கனவே 10 கப்பல்களை தாக்கிவிட்டோம். அவை தற்போது கடலின் அடிப்பகுதியில் உள்ளன. அணு ஆயுதங்களை பெற முடியாத நிலையை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ளது. ஈரானிய ஆட்சியாளர்கள் எல்லைகளுக்கு வெளியே ஆயுதம் ஏந்தவோ நிதி அளிக்கவோ முடியாத நிலை ஏற்படும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டிரைவர், கண்டக்டர் தகுதி பெற்ற முதல் பெண்
-
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்
-
31 லட்சம் டன்னை தாண்டியது தமிழகத்தில் நெல் கொள்முதல்
-
'காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது'
-
பழனிசாமி டில்லி பயணம் ஏன்?
-
கிடப்பில் சாலை பணி; கிராம மக்கள் அவதி