நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.65.59 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த நிதி ஆண்டின் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தகவல் பிரிவு இதை தெரிவித்துள்ளது.

Latest Tamil News

@block_B@2024-25 நிதியாண்டில், சாதனை அளவாக சேவை ஏற்றுமதி 35.26 லட்சம் கோடி ரூபாய். சேவைத்துறை வர்த்தக உபரி 17.18 லட்சம் கோடி ரூபாய். கடந்த மூன்று ஆண்டுகளில், 38 நாடுகளுடன் ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள். இது, உலக ஜி.டி.பி., சந்தையில் 70 சதவீதத்தை அணுக வாய்ப்பு. மின்னணு சாதனங்கள், மருந்து பொருட்கள், பொறியியல் தாயரிப்புகள், பெட்ரோலிய பொருட்கள், ஜவுளி, வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு.block_B

Advertisement