பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான தனது அழைப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக நாங்கள் குரல் எழுப்புகிறோம். மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, பல உயிர்கள் துரதிர்ஷ்டவசமாக இழக்கப்பட்டுள்ளன, அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். வளைகுடா
நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு மிகவும் முன்னுரிமை வாய்ந்தது. வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை இந்தியாவும் உறுதியாக எதிர்க்கிறது.
ஏற்கனவே, கடந்த சில நாட்களில் இதுபோன்ற தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, புனித ரமலான் மாதத்தில், பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மேலும்
-
ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்
-
பெட்ரோல், டீசல் விலை உயராது!
-
கமேனி இருக்குமிடம் சிஐஏ கண்டறிந்தது எப்படி?
-
வருமானத்தை மறைத்த ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்
-
திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி
-
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது: இபிஎஸ் கண்டனம்