கமேனி இருக்குமிடம் சிஐஏ கண்டறிந்தது எப்படி?
லண்டன்: ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி, அமெரிக்கா- இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் இருப்பிடம் கண்டறிந்தது எப்படி என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன் உயிருக்கு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் உளவுப்படையால் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த கமேனி, மிகவும் கவனமாக இருந்தார். எப்போது, எங்கே இருப்பார் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களை தவிர யாருக்கும் தெரியாது. தங்குமிடமும் ரகசியமாக இருந்தது. சில ஆண்டுகளாக அவர் குண்டு துளைக்க முடியாத பங்கர்களில் வசிப்பதாகவே நாடு முழுவதும் பேச்சு இருந்தது.
அப்படிப்பட்ட நிலையிலும், மிகச்சரியாக குண்டு வீசி, கமேனியை கொன்று விட்டனர், அமெரிக்க, இஸ்ரேலிய படையினர். இது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்கின்றனர், உளவுத்துறை ஆய்வாளர்கள்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் கேமராக்களும் இஸ்ரேலிய உளவுத்துறையால் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் இஸ்ரேலில் இருக்கும் சர்வரில் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன.
கமேனியின் பாதுகாவலர்கள் வருகை, செயல்பாடு முழுவதும் இஸ்ரேல், சிஐஏ., உளவுத்துறை கண்காணிப்பிலேயே இருந்தன. இது மட்டுமின்றி, ஈரான் மொபைல் போன் நெட்வொர்க்கிலும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் ஊடுருவி இருந்தனர்.
இப்படி, சேகரித்த உளவுத்தகவல் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் ஆலோசனையில் கமேனி பங்கேற்கிறார் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாத் உறுதி செய்து விட்டது.
ஈரானில் இருந்த சி.ஐ.ஏ., உளவாளி ஒருவரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதையடுத்து அரசியல் மட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. முன்னதாக, இணையத்தாக்குதல் நடத்தி ஈரான் ரேடார் கண்காணிப்பு சாதனங்கள் முடக்கப்பட்டன.
குறிப்பிட்ட அந்த வளாகம் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள், 30 துல்லிய குண்டுகளை வீசி தரை மட்டமாக்கின. இதில் தான் கமேனி மற்றும் முன்னணி தலைவர்கள் பலியாகினர். பகல் நேரத்தில் நடத்திய தாக்குதல் என்பதால், கூடுதல் வசதியாக இருந்தது என்றும் கூறியிருக்கின்றனர் இஸ்ரேல் ராணுவத்தினர்.
வாசகர் கருத்து (11)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 மார்,2026 - 21:43 Report Abuse
கமேனி இருக்கிற இடமெல்லாம் கண்டறிந்து போட்டுத்தள்ளுகிறீர்கள். ஆனால் ஊழல் செய்பவர்களை உங்களால் கண்டறியமுடியவில்லையே...? 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
03 மார்,2026 - 21:02 Report Abuse
மொசாட் தான் கண்டுபிடித்து இருப்பார்கள் CIA இருக்காது 0
0
Reply
MUTHU - Sivakasi,இந்தியா
03 மார்,2026 - 20:39 Report Abuse
இதன் பெருமை எல்லாம் இஸ்ரேலின் ஸ்பை சாப்ட்வேர் ஒன்றுக்கே சொந்தம். பல நாடுகள் தங்கள் உள்நாட்டு எதிரிகளை இந்த மென்பொருள் உபயோகப்படுத்தி கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன. அநேகமாய் கடைசியாய் மோடி இஸ்ரேல் சென்று வந்த நிகழ்வும் இந்த மென்பொருளுக்காய் தான் என்று நினைக்கிறேன். 0
0
Reply
Sun - ,
03 மார்,2026 - 20:23 Report Abuse
மேற்காசியாவில் ஆபத்தான தீவிரவாத குழுக்கள் ஈரானின் ஆசியுடன் செயல்பட்டு வந்தன. அந்தக் குழுக்கள் காஷ்மீர் தீவிரவாதத்திற்கும் ஆதரவு அளித்தது.எத்தனை அப்பாவிகள் இஸ்ரேலிலும், காஷ்மீரிலும் கொல்லப்பட்டனர். இன்று அவர்கள் விதைத்த விதையை அவர்களே அறுவடை செய்துள்ளனர். 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
03 மார்,2026 - 20:03 Report Abuse
கொமைனியை இஸ்ரேல் போட்டுத்தள்ளியதை இரானியர்கள் கொண்டாடுகிறார்கள். ஐம்பது வருடங்களாக நாட்டை சீர்கெடுத்துவிட்டார். மெக்ஸிகோவில் எல் மன்சோவை தேடிவந்த பெண்ணை வைத்து கண்டுபிடித்தது மாதிரி கொமைனிக்கும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
03 மார்,2026 - 19:51 Report Abuse
Mossad agents took the photo of Khameinis dead body even before the Iranians could confirm it themselves. The way Mossad agents embedded themselves in Khameinis close circuit, will be taught in textbooks later. 0
0
Reply
RK - ,
03 மார்,2026 - 19:49 Report Abuse
அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம். 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
03 மார்,2026 - 20:37Report Abuse
எதற்கு? 0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
03 மார்,2026 - 21:42Report Abuse
எதுக்குபா? 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
03 மார்,2026 - 19:32 Report Abuse
0
0
Reply
Moorthy - ,இந்தியா
03 மார்,2026 - 19:22 Report Abuse
யாரைத்தான் நம்புவதோ என்ற நிலையில் ஈரான். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement