ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை

வியன்னா: போரினால், ஈரானில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் சேதம் அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போரானது 4வது நாளை எட்டி இருக்கிறது. 10 மணி நேரம் இடைவெளிக்கு பின்னர் ஈரான் மீண்டும் தமது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளும் தாக்குதல்களை நிறுத்த வில்லை.

போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள முக்கியமான நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்து இருந்தது. தாக்குதலில் இந்த அணுசக்தி மையம் சேதம் அடைந்துள்ளதாக தற்போது சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் பூமிக்கு அடியில் உள்ள ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் முகப்பு பகுதி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சர்வதேச அணுசக்தி மையம் உறுதிப்படுத்த முடிகிறது. எவ்வித கதிரியக்க வீச்சு கசிவுகளும் இல்லை, கூடுதல் பாதுகாப்பு ஏதேனும் உள்ளதா என்றும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement