ரூ.80 லட்சத்தில் திட்டப்பணி 2 ஊராட்சிகளில் தொடக்கம்

பனமரத்துப்பட்டி:தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சிகளில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் பழனிசாமி, பி.டி.ஓ., கார்த்தி ஆகியோர் பூமி பூஜை செய்து நேற்று தொடங்கிவைத்தனர்.

அதன்படி தாசநாயக்கன்பட்டியில் அண்ணா நகர், காந்திபுரம் காலனி, போயர் தெரு, ராஜவீதி, சின்னயாபுரம் ஆகிய இடங்-களில் சிமென்ட் சாலை, மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய், ஏ.டி.சி., நகர், டெலிபோன் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது.

நிலவாரப்பட்டியில், என்.சி.பி., நகரில் தார்ச்சாலை, திருச்சி சாலை முதல் ஏலக்கரடு அய்யனாரப்பன் கோவில் வரை, 18 தெரு விளக்கு கம்பம், திருச்சி சாலை முதல் வெங்கடாசலம் வீடு வரை கழிவுநீர் கால்வாய், சிறுபாலம் அமைத்தல், ராஜ வீதியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன.
தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்-குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், பொருளாளர் வெங்கடா-சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement