மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மாசி மாத திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருக பெருமான் அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில், நேற்று திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது.

கா லை 7:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

கா லை 11:30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உத்சவத்தில் பங்கே ற்று சுவாமியை தரிசித்தனர்.

Advertisement