ரயில்வே அலுவலக வாயில் பெயர் மாற்றம்: இபிஎஸ் கோரிக்கை
சென்னை: திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு சூட்டப்பட்டு உள்ள ஹிந்தி பெயரை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், ஹிந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது ஹிந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் பிரதமர்,, சமீபத்தில் மலேசியப் பல்கலைக் கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவு கூரத்தக்கது.
இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் இபிஎஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
அட பரவாயில்லையே ,
திருச்சி ரயில் நிலையத்தில் கிந்தியில் பொரிக்கப்பட்ட எழுத்துக்களை எடப்பாடி டெலிவிஷனில் பார்த்து பொங்கி எழுந்தார்
திருச்சி ரயில் நிலையத்திற்கு "திருச்சி சிவா" ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.