திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்
சென்னை: ''தென் மாவட்டங்களை திமுக அரசு தொடர்ந்து பதற்றத்தில் வைத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக கொடூரம் தொடர்கிறது'' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே, தென் மாவட்டங்களை பதற்றத்தில் வைத்திருக்கிறது. நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், சாலையோர டீக்கடையில் இருந்த மக்களை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளது.
நாங்குநேரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், அங்குள்ள வீட்டின் சுவர் மீதும், எதிரே உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் மீதும், அங்குள்ள கோவில் முன்பும் திடீரென அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.
வஞ்சிக்கும் திமுக
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. அப்போதே போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுத்திருக்க முடியும். இன்று இரண்டு உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் பட்டியலின மாணவன் சின்னத்துரை, உடன் படிக்கும் மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் கவின், நெல்லை அருகே பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் படும் துன்பம் ஒன்றல்ல. இரண்டல்ல. பட்டியலின மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
சமூக அநீதி
பட்டியலின மக்கள் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும் திமுக அரசு, ஓரவஞ்சனையுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வேங்கைவயலில் பட்டியலின மக்களின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. ஆனால் இன்று வரை உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக, புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே வழக்கு பதிவு செய்து கொடுமை இழைத்தது திமுக அரசு.
@quote@காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை.quote தமிழகம் முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவதாக ஓராண்டுக்கு முன்பு வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில்தான், உலகின் எங்கும் காண முடியாத அளவுக்குப் பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுகிறது.
அவல ஆட்சி
போலீஸ் அதிகாரிகளை சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தாமல் வேறு மாவட்டங்களில் பணியமர்த்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவைக் கூட அவரது மகனான இந்நாள் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. போலிச் சமூகநீதி பேசும் ஸ்டாலினும் திமுக அரசும் விழித்துக்கொண்டதாக தெரியவில்லை.
@quote@திருப்பூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்ததைக் கூட இந்த திமுக அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. quote
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய உளவு அமைப்புகளும், பிற மாநில போலீசாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ளும் அவல நிலையில் திமுக அரசு இருக்கிறது. இப்படி ஒரு அவல ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவை, தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அரசை வீழ்த்த, தமிழக மக்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.
மிருகங்கள் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு ஏது? காட்டாட்சி நடத்தும் திமுக ஒழிக
ஆகுற ஃபுல் டைம் கொத்தடிமை ஆகுறேன் . புரிஞ்சவன் புத்திசாலி
தேர்தலில் வெற்றி பெற முடியாமல் அடுத்த மாநிலத்தில் ஓடி அவர்கள் தயவில் MP ஆன நீர் திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம் என்று புலம்பலாமா, ஆதாரம் இருந்தால் DETAIL ஆக பேசலாமே
தற்போதய நாங்குநேரி சம்பவத்திற்கு பின்னும் ஆதாரம் கேட்கும் நீயெல்லாம் பிறந்ததே வேஸ்ட்டுதான்.
கைய குடுங்க.. இனிமே நாம ப்ரண்ட்ஸ் திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதி ராகுலிடம் ப.சி சொன்ன ஒத்த வார்த்தை 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் திமுக கூட்டணி கிட்டத்தட்ட உடையும் நிலைக்கு வந்த நிலையில் அதனை ஒட்ட வைத்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம். 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என்ற திமுகவின் ஆஃபரை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற்றுக் கொள்ளலாம் என ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமைக்கு ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து கூட்டணிக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். பாவம் வடை போச்சே என்று பீசப்பி புலம்பல்
நீயே ஒரு கருத்தை சொல்லி நீயே புலம்பி. நீயே சமாதானம் ஆகிக்கோமேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு