தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
கரூர்:கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், 3.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 33 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அதில், எழில் நகரில், 7.02 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, சூர்யா குடியிருப்பில், 8.70 லட்சம் மதிப்பில் புதிய வடிகால் அமைக்கும் பணி, பாரி நகரில், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, எஸ்.பி.காலனியில், 12.76 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 புதிய வடிகால் அமைக்கும் பணி, பாரத ஸ்டேட் வங்கி காலனியில், 5.19 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
சின்ன ஆண்டாங்கோவில் பஞ்.,ல், 19.51 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 புதிய சிமென்ட் சாலைகள், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வடிகால் அமைக்கும் பணி, ராசி நகரில், 28.45 லட்சம் மதிப்பில், 2 புதிய வடிகால் அமைக்கும் பணி, முத்து நகரில், 18.13 லட்சம் ரூபாயில், 2 தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, அசோக் நகரில், 26.04 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை மேம்படுத்தும் பணி, செல்வ நகரில், 10.28 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 புதிய வடிகால்கள் அமைக்கும் பணி, ஆண்டாங்கோவில் புதுார் சிவா கார்டனில், 16.89 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணி என மொத்தம், 3.32 கோடி ரூபாய் மதிப்பில், 33 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் (தணிக்கை) ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத், சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்