கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி லட்சார்ச்சனை
கரூர்:கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி, நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது.
நவக்கிரகங்களில், முக்கிய கிரகமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். அதன்படி, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து, மீன ராசிக்கு வரும், 6ல் இடப் பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, விநாயகர் வழிபாட்டுடன் சனி பெயர்ச்சி விழா தொடங்கியது. பிறகு, சிறப்பு யாகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்றும், நாளையும் நவக்கிரக சன்னதியில் லட்சார்ச்சனை நடக்கிறது.
வரும், 6 காலை, 8:00 மணி 26 வது நிமிடத்தில் சனி பகவான் இடப்பெயர்ச்சியையொட்டி, நவக்
கிரக சுவாமிகளுக்கு அஸ்திர ேஹாமம், சந்தனம், மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட, 18 வாசனை திரவியங்கள் மூலம், அபிஷேகம் நடக்கிறது.
மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்