தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ப.வேலுார்:ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது.

இந்த சந்தைக்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பர-மத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதி-களில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.


கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் ஒரு கிலோ, 48.20 ரூபாய், குறைந்தபட்சம், 30.10 ரூபாய், சராசரி, 43.10 ரூபாய் என, 14,60 தேங்காய்கள், 4 லட்சத்து, 85,000 ரூபாய்க்கு வர்த்தகமா-னது.


இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 55.85 ரூபாய், குறைந்தபட்சம், 35.39 ரூபாய், சராசரி, 50.50 ரூபாய் என, 11,450 தேங்காய்கள், 3 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தக-மானது.

Advertisement