194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு
துபாய்: ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இதுவரையில் 1000க்கும் மேற்பட்ட தாக்குதலில் ஈரான் ஈடுபட்டதாகவும், பிராந்திய பாதுகாப்பு கருதி தற்காப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, யுஏஇ, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணு வ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 194 ஏவுகணைகள் மற்றும் 812 டிரோன்கள் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட தாக்குதலை ஈரான் நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மொத்தம் ஏவப்பட்ட 194 ஏவுகணைகளில் 180 ஏவுகணைகள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 13 ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும், ஒரு ஏவுகணை பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல, 812 டிரோன்களில் 755 இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. 57 டிரோன்கள் பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நிலப்பரப்பையும், வான்வெளியையும் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள யுஏஇ, ஈரான் தாக்குதலில் இருந்து பிராந்தியத்தை காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் தொடர்ந்து தாக்கி வருவதால் சர்வதேச கிராமம் இன்றும் மூடப்படுவதாக யுஏஇ அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில், துபாயில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் போட்டோக்களை பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு துபாய் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்