குடிநீர் வழங்காததால் காத்திருப்பு போராட்டம்

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் யூனியன், லத்துவாடி பஞ்., செலமகவுண்-டம்பாளையம் காட்டுசாலை பகுதியை சேர்ந்தவர் பூசன்; பஞ்., முன்னாள் துணைத்தலைவர். இவருக்கு, கடந்த, 6 மாதங்களாக பஞ்., நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கவில்லை. பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும், அதிகாரிகளிடத்திலும் புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், 'ஜல்ஜீவன்' திட்டத்தில் குடிநீர் இணைப்பிற்காக, 1,000 ரூபாய் டிபாசிட் செய்திருந்தும் குடிநீர் வழங்கவில்லை. இதை கண்டித்து, நேற்று, எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன், பூசன் மற்றும் எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement