தேசிய தாய் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

நாமக்கல்:தேசிய அளவிலான தாய் பாக்சிங் போட்டி, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடந்தது. அதில், நாமக்கல் மாவட்-டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.


வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா, விருது வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு தாய் பாக்ஸிங் சங்க தலைவர் பிராங்கிளின் பென்னி, தமிழ்நாடு தாய் பாசம் சங்க பொதுச்செயலாளர் மாஸ்டர் ஷேக் அப்துல்லா ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு தாய் பாக்ஸிங் சங்க சேர்மன் மகரிஷி ஹரிஹரன், சிறப்பு அழைப்பாளாக பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பதக்கம், நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற வீரர்கள், நேபாளில் நடக்கும் ஆசிய போட்டியில் பங்கேற்கின்-றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement