பி.ஜி.பி., கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்:நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு, நான்கு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கல்லுாரி தலைவர் பழனி ஜி பெரியசாமி, துணைத்தலை வர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தாளாளர் கணபதி, முதன்மையர் பெரியசாமி, முதல் வர் கலைமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலு-வலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.


இதில், பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து மனித-வள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் பங்கேற்று, 200க்கும் மேற்படட மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணை வழங்கினர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு, ஆரம்-பத்தில் இருந்து கலந்துரையாடல், பேச்சுத்திறன், மொழித்திறன், நேர்முகத்தேர்வை கையாளும் விதம் போன்றவற்றில் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. இதனால் நேர்முக தேர்வில் தேர்ச்சி-பெற உதவியாக இருக்கிறது.

முகாமில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு ஒருங்கி-ணைப்பாளர்களாக கணினி அறிவியல் துறைத்தலைவர் விஜய-பாஸ்கர், ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பிரசாந்த், கார்த்திக் ராஜா மற்றும் விஜய சாரதி ஆகியோர் மாணவர்களுக்கு வேலை-வாய்ப்பை பெற்றுத்தர உதவியாக இருந்துள்ளனர்.

Advertisement