கொல்லிமலை வான்வெளி பூங்காவில் இரவு வான் அதிசயங்கள் கண்டு ரசிப்பு
சேந்தமங்கலம்"கொல்லிமலை காப்புக்காட்டில் திறக்கப்பட்டுள்ள, 'இரவு வான்வெளி பூங்கா'வில் வான் அதிசயங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொல்லிமலையில் உள்ள சோளக்காட்டில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் காப்புக்காடு உள்ளது. இப்பகுதியில், இரவு நேரத்தில் வான்வெளியில் நடக்கும் அற்புதங்களை கண்டு ரசிக்க, 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'இரவு வான்வெளி பூங்கா' கட்டி முடிக்கப்பட்டது. இதை கடந்த பிப்., 27ல், சென்னையில் இருந்து கான்பரன்ஸ் மூலம் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அங்கு சென்று, இரவில் வானில் நடக்கும் அதிசயங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இரவில் அந்த பூங்காவிற்கு செல்ல பெரியவர்களுக்கு, 200 ரூபாய், சிறுவர்களுக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகி-றது. அதேபோல், பகல் நேரத்தில் அங்கு செல்ல, 10 ரூபாய் கட்-டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கேயே இரவு தங்க, தற்காலிக கூடாரங்கள் அமைத்து கொடுக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை, கொல்லிமலையில் நீர்வீழ்ச்சி, கோவில் என பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகளுக்கு, 'இரவு நேர வான் பூங்கா' மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்
-
194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு
-
யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
-
இஸ்ரேல் பிரதமரை திருப்திப்படுத்த ஈரானுக்கு எதிராகப் போர்; அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு