மூதாட்டியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
தலைவாசல்:தலைவாசல்
அருகே மணிவிழுந்தான், ராமானுஜபுரத்தை சேர்ந்த, இளங்கோ மனைவி ஜானகி,
61. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகனுக்கும் வண்டிப்பாதை
தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் ஜானகி, அவரது நிலத்தில் கம்பி
வேலி அமைத்துள்ளார். அதுகுறித்து வேல்முருகன், அவ-ரது தம்பி
இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் கேட்டு தக-ராறு செய்துள்ளனர்.
தொடர்ந்து
ஜானகியை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், ஆத்துார் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தலைவாசல்
போலீசார், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் நேற்று முன்தினம்
வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து வேல்முருகன், 47, அவரது மகன்
மூர்த்தி, 26, இளையராஜா, 46, ஆகியோரை கைது செய்தனர்.
பஸ் டிரைவர் மீது
ஆயுதத்தால் தாக்குதல்
சேலம், மார்ச் 4
சேலம்,
அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் சிங், 58. தனியார் பஸ் டிரைவரான
இவர் நேற்று முன்தினம் இரவு, பழைய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது,
கழுத்தில் கூர்மையான ஆயு-தத்தால், மர்ம நபர் தாக்கியுள்ளார்.
ரத்தம்
வெளியேறி மயங்கி கிடந்த சங்கர் சிங்கை, அருகே இருந்-தவர்கள் மீட்டு,
சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்