ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி; தஞ்சையில் விஜய் கடும் தாக்கு
நமது நிருபர்
தஞ்சாவூர்: ''ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,'' என தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூர், செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: நான் கடந்த வேலூர் கூட்டத்தில் பேசும் போது சொல்லி இருந்தேன். தமிழகம் தான் விஜய், விஜய் தான் தமிழகம் என்று சொல்லி இருந்தேன்.
தமிழக மக்களின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும் தான் இருக்கிறோம். அதனால் தான் அப்படி சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என்று சொன்னேன். இது தமிழகத்திற்கான தேர்தல். ஏன் டில்லிக்கும், தமிழகத்துக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருந்தேன்.
ஒர்க்அவுட் ஆகாது
உடனே விஜய் பாஜவுக்காக பேசுகிறார் என்று திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். நமது சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலையை செய்கின்றனர். இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.
சென்னையில் டில்லி, டில்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால், டில்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதும், இது எல்லாம் யார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். தமிழகத்தை காப்பாற்றுவது திமுக தான்; ஸ்டாலின் தான் என்று சொல்கின்றனர். இதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது பாஸ்!
திமுக தீயசக்தி
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை டில்லி அணியால் தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழகம் தான் சிஎஸ்கே. வர போகும் தேர்தலில் விசிலை போட போவது நமது தவெக தான்.
தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இந்த அணி, டில்லி அணி எல்லாம் நொறுங்கும். தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவில் யாரும் உள்ளே நுழைய முடியாது.
அப்பா - பிள்ளை உறவு
இது ஒரு அம்மா, பையன் உறவு, அப்பா - பிள்ளை உறவு. அண்ணன்- தங்கை, அண்ணன் தம்பி உறவு. இது தேர்தலுக்காக வந்த உறவு இல்லை. இயற்கையாக அமைந்த உறவு. இதனை தமிழக மக்களும், நானும் உணர்ந்து இருக்கிறோம்.
மற்றவர்களுக்கு வேணும் என்றால் இது தேர்தல்; எனக்கு மற்றும் மக்களுக்கும் இது ஒரு எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூகநீதியை நிலைநாட்ட நம்ம ஆட்சியை நீங்க அமைப்பீர்கள் தானே? விஜய்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே?
அடுத்த ஜென்மத்தில்
இந்த விஜயை நம்புகிறீர்கள் தானே, ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் பறக்கும் தானே! அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே? உடம்பு சரியில்லாத போது தான் டாக்டரை நினைப்போம். பிரச்னை என்றால் வக்கீலை தேடி போவோம். இது மனிதனின் இயல்பு.
நாம் சாப்பாடும் போது ஒருவர் பற்றி யோசிப்போம். அது யாரும் இல்லை. விவசாயிகள். அவர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால், சாதாரணமாக இருப்பார்கள். அவர்கள் சாதாரண ஆள் கிடையாது.
கடவுளுக்கே படையல் போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விவசாயிகளை பற்றி எனக்கு தெரியாது ஒத்து கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்கள் படுகிற கஷ்டம் எனக்கு தெரியும்.
தமிழகமே திவால்
நமது ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய பிரச்னைகளில் விவசாய பிரச்னைகளும் ஒன்று. தண்ணீர் திவால் என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனை படிக்கும் போது பகீர் என்று இருந்தது. அதற்கு காரணம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்காமல் விட்டது தான் காரணம். மணல், கனிம வளங்களை கொள்ளை அடித்தால் வேறு என்ன நடக்கும்?
மணல் கொள்ளையர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்களா? மணல், கனிம வள கொள்ளைக்கு மணல் மாபியா குழு தான் காரணம் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியதை மறந்துவிட்டீர்களா? மணல் மாபியா குரூப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதை இல்லை என்று யாரும் சொல்ல முடியுமா? தண்ணீர், மணல், கனிமவளம் என மொத்த தமிழகமே திமுக ஆட்சியில் திவாலாக போகிறது.
மானே, தேனே...!
கடன் மேல் கடன் வாங்கி உங்களது அரசே படுத்துவிட்டது. பரந்தூர் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பெரிய, பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டார்கள், ஆட்சி முடியும் போது தான் செய்வார்கள்.
மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஆட்சிக்கு வந்து உடன் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டாமல் முடியும் போது அடிக்கல் நாட்டுகிறீர்கள்.
ஓட்டுக்காக நீங்கள் என்ன பேசினாலும் மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் என்று நினைத்தீர்களா? மீனவர்கள் பிரச்னைக்காக, மானே, தேனே, பொன் மானே போட்டு அவ்வப்போது கடிதம் எழுதி விட்டு துாங்க போய் விடுவார்.
@quote@விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜயை முடக்க முடியாது.quote
திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சிக்கு வருவது என்பது நடக்கவே நடக்காது; கருணாநிதியாலயே முடியவில்லை. 'அடுத்து நாங்க தான் என கூறும் யாராவது நாங்க ஊழல் செய்யாதவர்கள், ஊழல் செய்ய மாட்டோம்', என மனசாட்சியோட சொல்ல முடியுமா?
கமிஷன் இருக்காது
தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்காது. மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். கமிஷன் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தவெக முன்னுரிமை.
விவசாயிகள் எதிர்க்கும் எந்த திட்டமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் நிராகரிக்கப்படும் தென் மாவட்டத்தில் ஒரு ஊரில், உங்கள் தந்தைக்கு சிலை வைக்க முயற்சி செய்தீர்களே! அப்போ என்ன கேட்டாங்க சுப்ரீம் கோர்ட்டில்? 'மக்கள் பணத்துல யாருக்கு புகழ் பாட பார்க்கிறீங்க' என்று கேட்டாங்களே, அதற்கு என்ன அர்த்தம்? ஊரான் வீட்டு நெய்யுல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம். இவ்வாறு விஜய் பேசினார்.
@block_G@
* தவெக ஆட்சியில் உர தட்டுப்பாடு இருக்காது.
* 5 ஏக்கருள்ள விவசாயிகள் பயிர்க்கடன் ரத்து; அதற்கு மேல் உள்ள விவசாயிகள் பயிர்க்கடனில் 50 சதவீதம் வரை ரத்து செய்ய சாத்தியக்கூறு ஆராய்ந்து நடவடிக்கை.
* திமுக மாதிரி எல்லாருக்கும் என்று சொல்லி விட்டு, அதில் தகுதி நிர்ணயித்து ஏமாற்ற மாட்டோம்.
* 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில அரசு, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருந்தால், அவர்களது குழந்தைகளின் முழு கல்விச்செலவையும் அரசே ஏற்கும்.
* விவசாயிகள் விருப்பத்துக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை நிராகரிப்போம்.
* தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
* 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை ஏற்படுத்துவோம். ஆண்களுக்கு ஆண் எடையாளர்; பெண்களுக்கு பெண் எடையாளர் இருப்பர்.
* ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும்.
* மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பு தர வேண்டும். அதற்கு உணர்வு பூர்வமான அழுத்தம் தருவோம்.
* கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை, பஸ் வசதிகளுக்கு அரசு முக்கியத்துவம் தரப்படும்.block_G
@block_B@
பிரசாரத்தில் விஜய் பேசுகையில், ''மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி திமுக ஆட்சி. மக்களை நேசிக்கும் விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? இந்த சத்தத்திற்கு ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என்று அர்த்தம் கிடையாது. தீய சக்தி திமுக ஆட்சி மறையட்டும் என்று அர்த்தம். தூய சக்தி தவெக ஆட்சி வரட்டும்'', தெரிவித்தார். block_B
@block_P@
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியது தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
தம்பி முதலில் தேர்தலில் வெற்றி அடய வேலை செய். தேவை இல்லாத வெட்டி பேச்சை குறையுங்க. அடுத்தவனெ குறை சொல்லுவதை நிருத்து. ஆக்கபூர்வமான திட்டங்களை, கொள்கைகளை அறிவுப்பூர்வமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இருக்க பூமியில் வீடு கட்டுங்க வெற்றி பெற்ற பிறகு ஆகயத்தில் அரண்மனை கட்டலாம்.
நூல் நுழையாத இடத்துல கூட மூக்கை நுழைப்பவனுங்க இந்த திருட்டு தீய முக காரனுங்க. ஏதோ ஆக்டர் விஜய் ஐ திட்டுவதற்கு என்ன கிடைச்சாலும் சரி அதை பிடிச்சு கிட்டு தொங்குவானுங்க.
நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் திமுக ஒரு மகாதீயசக்திதான். அதுபோட்ட குட்டி அதிமுக ஒரு தீயசக்தி. அதுக்கு ஓட்டுபோடுறவனும் அந்த கட்சிக்கு ஆதரவா கருத்துபோடுறவனும் தீயசக்திதான்.
ஆக்டர் விஜய் பேசுன ஓரே ஒரு விஷயம். நெல் கொள்முதல் மையத்தில் கமிஷனை ஒழிப்பேன். நெல்லை நனையாமல் பார்த்து கொள்வேன். மத்த எவனும் இன்க்லூடிங் பாஜக அண்ட் எடப்பாடி சொல்லலை. டெல்டா மாவட்டங்களில் இது அடிப்படை தேவை. அடலீஸ்ட் விஜய் அதைப்பத்தி பேசியிருக்கிறார். முன்பு நெல் பணம் பட்டுவாடா செய்யும் போது இந்த கமிஷனை கழித்து விட்டு பாக்கி பணத்தை குடுப்பார்கள். இப்போ ஆன் லைன் பட்டுவாடா என்பதால் கமிஷனை வாங்கி கொண்டு அப்பறம் தான் பில் போடுகிறார்கள். அதை விட ஜோர் என்னான்னா வாடகை கார் எடுத்துக் கொண்டு செக்கிங் ஆபீஸர் ன்னு ஒருத்தன் அல்லது ரெண்டு பேர் வருவானுங்க. செக் எதுவும் பண்ண மாட்டானுங்க. கலெக்ஷன் பணத்தை சுருட்டி பையில் வச்சி எடுத்து கிட்டு போயிடுவானுங்க. இந்த கமிஷன் மேல் மட்டத்துக்கும் மேல் மட்டம் வரை போகுது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஒருத்தன் இல்லாமல் பண்றேன் ன்னு சொல்றான். அது பெரிய விஷயம். மத்த படி நம்ம சாராய வியாபாரியை அவன் சார் அங்கிள் முதல்வர்ன்னு என்ன வேணாலும் சொல்லட்டும். கொள்ளைக்காரன் ஐ என்ன சொன்னா என்ன? கட்டு மரம் கழுவி ஊத்தாததா?
இவர் ஒரு கேடு கெட்ட ஏமாற்று சக்தி என்பது அனைவருக்கும் தெரியும். உங்களிடம் இருக்கும் அவலை கொண்டுவருங்கள் என்னிடம் இருக்கும் உமியை கலந்து ஊதி ஊதி திண்போம் . என்கிற ஏமாற்று பேர்வழி
பெண் வாக்காளர்களின் ஆதரவுதான் ஒரு கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்பதை அறிந்தே, "பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்" என்று கடந்த முறை மேடையில் முழங்கினார். ஆனால் இந்த முறை அதையும் தவிர்த்து விட்டார், நிஜ வாழ்க்கையில் தன் மனைவி முன்வைத்த புகார்களுக்கு அவர் பதில் அளிக்காதது, அவரது குடும்பப் பாங்கான பிம்பத்தை Family-man Image பாதிக்குமோ என்ற அச்சம் கட்சி நிர்வாகிகளிடையே மெல்ல எட்டிப் பார்க்க தொடங்கி உள்ளது. சங்கீதா புகாரால் தனக்கு டேமேஜ் அதிகம் ஆகிவிட்டதை உணர்ந்த விஜய்.. இன்று அதை பற்றியும் பேசவில்லை, பெண்கள் பாதுகாப்பு விவகாரம் பற்றியும் பேசவில்லை. அவரிடம் இருக்கும் அரசியல் ஆலோசகர்கள் கொடுத்த அட்வைஸ்படி அவர் சங்கீதா பற்றி தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி அசிங்கப்பட்டுடாய்
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ஸ்டாலின் அங்கிள் என ஆரம்பத்தில் கிண்டல் அடித்து பேசி வந்த விஜய் தற்போது ஸ்டாலின் சார் என பேசி வருகிறார். மேலும், இன்று தஞ்சையில் பேசிய விஜய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது தவெகவினரையும் விஜய் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், பலரும் அதற்காக குரல் கொடுத்தனர். குறிப்பாக நம்ம சிஎம் சார் கூட குரல் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றி என விஜய் பேசியுள்ளார்.
ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
நல்லாவேலை வல்லபாய் பட்டேல் பற்றி பேசல, பேசி இருந்தா இன்னையோட NO கூட்டம்.
எங்களுக்கு திமுகவை சொன்னதே போதும்...உனக்கு....
உங்களை லிஸ்ட் இல் இல்லவே இல்லை என்று படு பவிச்சா சொல்லியும் கொஞ்சம் கூட அது இல்லாமல் dmk, எங்க எதிரி அவர்கள் தான் நீயெல்லம் தூசு என்று பீசப்பி NDA எல்லாம், ஸ்டாலின் தான் உங்களை சேர்த்து கொள்ளுகிறார்
வெல்வோம் ஒன்றாக ...... இந்த விளம்பரத்துக்கு செலவு செய்வது தமிழக அரசு ..... ஆனால் அதில் ஸ்டாலின் படம் .....
எழுதி கொடுத்து படித்து மனனம் செய்து ஒப்புவைப்பது போலத்தான் நன்கு தெரிகின்றது. ஆனாலும் திமுகவை தொடர்ந்து வெளுத்து வாங்குவதில் எல்லோருக்கும் சந்தோசம்தான். என்ன நீங்கள் பிரிக்கும் வாக்குகளால் பாஜக அதிமுக கூட்டணிக்கு நல்ல பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படி அரசியல் தெரிந்தவர்கள் என்று ஓரிரண்டு பேரை தவிர எவருமே இல்லை என்பதுதான் உங்களின் பலவீனமே. நீங்களே திடீர் என்று முளைத்த காளான் போன்று வந்துவிட்டீர்கள். அதிலும் சினிமா ஷூட்டிங் இல்லாத நாளில்தான் உங்களுக்கு மக்களின் ஞாபகமே வரும்போல. உங்களால் ஆட்சி அமைக்கவே முடியாது. உங்களது பலத்தால் பாஜக அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணியாக மாறும் என்பதிலே உறுதியாக சொல்ல முடியும்.மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்