கலசப்பாடி மலை கிராமத்திற்கு மினி பஸ் இயக்கம் துவக்கம்
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் தாலுகா, சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட, கலசப்பாடி,
அரசநத்தம், ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி, அக்கரகாடு, நைனான்வளவு,
புளியா
மரத்துவளவு உள்ளிட்ட, 8 கிராமங்களில், 5,000க்கும்
மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமங்களுக்கு
வாச்சாத்-தியில் இருந்து, செல்லும், 7 கி.மீ., நடைபாதை மண் சாலை
கர-டுமுரடாகவும், மேடு, பள்ளமாகவும் இருந்தது. அச்சாலை குறுக்கே
செல்லும் காட்டாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்-பெருக்கு
ஏற்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் தொகை
அதிகரிப்பு, கல்வி, வேலைைாய்ப்பு மற்றும் விவசாய பொருட்களை எடுத்து
செல்ல, தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டுமென, மலைக்கிராம மக்கள், மத்திய,
மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதையடுத்து,
தமிழக அரசு, தார்ச்சாலை மற்றும் காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்
கட்ட, 12.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து, பணிகள்
முடிவடைந்த நிலையில், கடந்த மாதம், 21ல் வேளாண் அமைச்சர்
பன்னீர்-செல்வம் கலசப்பாடி கிராமத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட
தார்ச்சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனிடையே, அரூரிலிருந்து கலசப்பாடிக்கு நேற்று மினி பஸ்
இயக்கத்தை கலெக்டர் சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,
தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
-
ஈரான் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; துபாய் மாலில் நடந்து சென்ற அதிபர், இளவரசர்
-
ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
-
ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
-
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
-
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்