ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
நெருடல்
எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது. காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.
தி.மு.க., தரப்பில், 'காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, 'கூலாக' தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.
நிர்ப்பந்தம்
இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்பட்டது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடன்இருந்தார்.
இதன் பிறகு அவர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேசினார்.
இந்நிலையில், இன்று மாலை திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் ராஜ்யசபா சீட் ஒன்றை வழங்க திமுக முன்வந்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேர்ந்து கையெழுத்து போட்டனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது;
இன்று திமுக காங்கிரஸ் இடையே தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும்.
தொகுதி ஒதுக்கீட்டில் எந்த தாமதமும் இல்லை. மனநிறைவோடு இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.
@block_B@2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2026 சட்டசபை தேர்தலில் கூடுதலாக வெறும் 3 தொகுதிகள் காங்கிரசுக்கு தரப்பட்டு உள்ளன.
இந்த 3 தொகுதிகளை பெறுவதற்காக 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் காத்திருந்தது.block_B
அப்ப தொண்டனுக்கு ஐஸ் புருட்தானா
நம்பிட்டோம் , தேர்தல் தேதி அறிவிக்கப்படும்வரை பல நாடகங்களை பார்க்கலாம்
முழுகபோகிற கப்பலில் ஏறுவதற்கு எத்தனை நாடகம் . கூடா நட்பு கேடாய் முடியும். விரைவில் நிருபணம் ஆகும் .
ஆட்சியில் பங்கு என பல வாய்கள் பேசியதே
பாஜக விஜய்யுடன் கூட்டணி என்று பேசினால் பாஜகாவுக்கும் அதிக சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற கோஷம் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. எனினும் தவெக வின் உண்மையான வாக்கு வங்கி பலம் என்ன என்பது தெரியாத நிலையில், ஆழம் தெரியாமல் காலை விட காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. எனினும், இந்த தேர்தலில் திமுக வின் வாக்கு வங்கி, நடிகர் விஜய் வருகை காரணமாக கணிசமான அளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளதால், திமுக வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை நிச்சயம் சந்திக்கும்.
வீரவேசமாக பேசும் நம் முதல்வர் காங்கிரஸ் போனால் எங்கே தோற்று விடுவோம் என்ற பயத்தில் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுத்திருக்கிறார் இங்குள்ள முட்டுக்கள் முதல்வர் செய்தது ராஜதந்திரமாம் ஆகு ஓவியங்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள். லெட்டர் பேடு கட்சி காரர்களை எல்லாம் கூப்பிட்டு கூட்டணியில் வைத்திருக்கிறார். சாதனைகள் உரிமைத்தொகை கோடைகால சிறப்பு தொகை இவை எல்லாம் கொடுத்தும் தோல்வி பயத்திலிருந்து மீளவில்லை. என்ன இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு உள்ள தைரியம் இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு வராது. என்னத்த சொல்ல.
அப்படியும் பெருந்தோல்வி காத்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.
ஆன காங் காரர்களின் ஆணவ பேச்சினால் திமுக தொண்டர்களின் ஆதரவு முழுதாக கிடைக்குமா? ஆப்பு தான்?
தி.மு.க கூட்டணியில் வேறு எந்த கட்சிக்கும் 2021 தேர்தலில் கொடுத்த சீட் எண்ணிக்கையில் இருந்து கூடுதலாக கொடுக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸ் விஜயை காண்பித்து இதில் சாதித்து விட்டது. கூடுதலாக 3 சட்ட சபை தொகுதிகள் , ப்ளஸ் போனசாக 1 ராஜ்ய சபா சீட். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை கூடக் கூட அதுஎதிர்கட்சிகளுக்குத்தான் சாதகமாக அமையும்.மேலும்
-
இந்தியாவை சமாளிக்குமா இங்கிலாந்து 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்...
-
ஆலன் சதம்... பைனலில் நியூசிலாந்து: தொடரும் தென் ஆப்ரிக்கா சோகம்
-
சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி: ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
-
கடைசி நேரத்தில் வீழ்ந்தது இந்தியா * ஆசிய கால்பந்தில் ஏமாற்றம்
-
குகேஷை வென்றார் அரவிந்த்
-
ரொனால்டோவுக்கு காயம்