சாலை வசதி செய்து தர வேண்டி கோட்டூர் மலைவாழ் மக்கள் மறியல்

பென்னாகரம்:கோட்டூர் மலைக்கு அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பென்-னாகரத்தில் நேற்று, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர்.

பென்னாகரம் ஒன்றியம், வட்டுவனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்-பட்ட கோட்டூர் மலை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 300 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த மலை கிராம மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஊருக்கு தேர்தலின்போது, கழுதைகள் மீது வாக்குப்பெட்டி எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த முறை, டிராக்டரில் வாக்-குப்பெட்டிகளை எடுத்துச் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து வசதி இல்லாததால், தண்ணீரின்றி திண்டாடி வருவதாகவும், அரசியல்வாதிகள் தேர்தலுக்கு, தேர்தல் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், தேர்தல் முடிந்ததும் கண்டு-கொள்ளாமல் விடுவதுமாக உள்ளனர், என்றனர்.
இந்நிலையில், பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலக பஸ் ஸ்டாப்பில், பென்னாகரம் - தர்மபுரி சாலையில் நேற்று மதியம், 2:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பென்-னாகரம் பி.டி.ஓ., லோகநாதன், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அந்த மக்க-ளிடம் பேச்சுவார்த்தை செய்து கலைந்து
போகச்செய்தனர்.
இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்-குவரத்து பாதித்தது.

Advertisement