வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்
சென்னை: திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இப்படிபட்ட சூழலில், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
@1brவரும் சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் குரல் கொடுத்தனர். அதற்கேற்றாற் போலவே, தொகுதி பங்கீடு நடத்த 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் குழு அமைத்தும், திமுக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது. இது காங்கிரஸ் தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, திமுக கூட்டணியை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல், தவெக கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை வரை எடுத்துச் சென்றனர். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நிலவி வந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சி நிர்வாகிகளையும் சமாதானம் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இப்படிபட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவில்; தனிநபர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். நம் அனைவரை விடவும் கட்சியே பெரியது. காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு, அனைவரும் கட்டுப்படுவோம் . ஏனெனில் ஒற்றுமையே நமது பலம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (41)
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
04 மார்,2026 - 20:02 Report Abuse
என்னய்யா பொசுக்குனு பம்பிட்ட. கூப்டு செஞ்சு விட்டாய்ங்களா சோணமுத்தா? ரெம்ப பேசின இப்ப பேசு...உனக்கு அடுத்தவாட்டி எம்.பி.பதவி அவுட்...பத்து சூதானமா இருந்துக்கோ 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
04 மார்,2026 - 19:37 Report Abuse
திமுக முதுகில் ஏறி சவாரி செய்தது பின்பக்கம் ரொம்ப வலிக்கிறது. அதனால் பொதிகழுதையை மாற்றி தவக பக்கம் காங்கிரஸ் திரும்புகிறது. 0
0
Reply
sathya / ilangai - colombo,இந்தியா
04 மார்,2026 - 16:31 Report Abuse
200 +
பிரியாணி+
Quarter ===
Jhoot..... 0
0
Reply
Troo Picture - Bangalore,இந்தியா
04 மார்,2026 - 15:39 Report Abuse
இருப்பதோ ஒரு நாடக மேடை
தேர்தல் நேரத்த்து கூட்டணி வாடை
திறப்பதோ ஒரு ஆட்சி கனவு
தேடி எடுத்தால் வருமான உயர்வு ...
உயர்வு உயர்வு 0
0
Reply
Balakumar V - ,இந்தியா
04 மார்,2026 - 15:36 Report Abuse
ரொம்ப பேசினா அடுத்த வேளை சோறு கிடைக்காது 0
0
Reply
K.Ramachandran - Chennai,இந்தியா
04 மார்,2026 - 15:10 Report Abuse
நாடகத்தில் என் பங்கு முடிந்து விட்டது. நன்றி. 2029 மக்கள் அவை தேர்தலில் MP ஆகணும் 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
04 மார்,2026 - 14:54 Report Abuse
ஓஹோ. அப்புடியா? கருப்பு சட்டை காட்டி குடுத்துட்டுதே..எலி தவக்களை ஒற்றுமை. அது சரி. எங்க ப சி பேசுனாரே? அதன் முடிவு என்னாச்சி? 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
04 மார்,2026 - 14:53 Report Abuse
தண்ணிய குடிங்க. 0
0
Reply
Nesan - JB,இந்தியா
04 மார்,2026 - 14:28 Report Abuse
ஒரே குட்டையில் ஊறிய மட்டை. 0
0
Reply
CHELLAKRISHNAN S - chennai 600073,இந்தியா
04 மார்,2026 - 14:17 Report Abuse
adhu vera vayi 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
-
ஈரான் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; துபாய் மாலில் நடந்து சென்ற அதிபர், இளவரசர்
-
ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
-
ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
-
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
-
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்
Advertisement
Advertisement