கமேனி மறைவுக்கு இந்தியா இரங்கல்
கடந்த மாதம் 28ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி வசிக்கும் இடத்தில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில், அவர் பலியானார்; அலி கமேனியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சிலரும் உயிரிழந்தனர்.
உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் மீது, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கமேனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் உள்ள ஈரான் துாதரகத்துக்கு நேற்று சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அங்குள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, அது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார்.
இந்தியாவுக்கான ஈரான் துாதர் முகமது பதாலியிடம் இரங்கல் கடிதத்தை வழங்கும் புகைப்படத்தை, வெளியுறவு அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அப்பாடா இறுதியாக இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. அதுவே டிரம்ப் இறந்திருந்தால் மோடி முதல் ஆளாக இரங்கல் தெரிவித்துருப்பார். எல்லாம் இந்த எப்ஸ்டீன் பைல் படுத்துறபாடு.
ஆம் மிகவும் சரி. கமேனி இந்து எதிர்ப்பு வாதி. தீவிர வாரத்தில் தீவிர நம்பிக்கை
இந்தியாவுக்கு தேவையற்ற செயல் இது. தேசதுரோக காங்கி கூட்டணிகள் கொடுத்த அழுத்தத்தால் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. கொடுங்கோலன் கமேனியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது சுலாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயல்.