அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மதுரை: ''தேர்தல் வரை தான் அதிமுகவுக்கு இபிஎஸ் பொதுச்செயலாளர். தேர்தல் முடிந்ததும், வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமித்து விடும்,'' என்று மதுரையில் நடந்த ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:
இது மிக வித்தியாசமான மேடை. சில காலம் முன்பு வரை .ஓபிஎஸ், இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும் எம்ஜிஆர் இருந்த தாய் கழகமான திமுகவுக்கு திரும்பி இருக்கிறார். அவரையும், அவருடன் இணைந்தவர்களையும் திமுக தலைமை தொண்டனாக நான் வரவேற்கிறேன்.
எம்ஜிஆருக்கு நானும் ரசிகன் தான். கழகத்தை அவர் வளர்த்தார், கழகமும் அவரை வளர்த்தது. அப்படிப்பட்ட தாய்கழகத்திற்கு நீங்கள் எல்லாரும் திரும்பி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பி உள்ளீர்கள்.
அண்ணாதுரை பெயரை தாங்கிய இயக்கம், அவரையும், அவரின் கொள்கையையும் மறந்து, அண்ணாதுரை தொடங்கிய இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள். சுயமரியாதை கோட்டையான அறிவாலயத்திற்கு வ்ந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் வரவேற்கிறேன். ஓபிஎஸ் எப்போதுமே சிரித்த முகமாக தான் இருப்பார். அது தான்அவரின் பண்பு. ஓபிஎஸ்சை பார்க்கும் போது அமைதியும், புன்னகையும் மட்டுமல்ல நினைவுக்கு வருவது விசுவாசம்.
ஆனால் துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் தான் இபிஎஸ். கூவத்தூர் சம்பவம் மூலம் முதல்வர் பதவி வாங்கிவிட்டு, அந்த பதவியை தந்த சசிகலாவையே ஒருமையில் பேசியவர் தான் இந்த இபிஎஸ்.
இபிஎஸ்சை பொறுத்தவரையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்வார். அவரின் உச்சக்கட்ட துரோகம் என்ன தெரியுமா? எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார்.
பாஜ தமக்கு நல்லது செய்யும் என்று இபிஎஸ் இன்றைக்கு நினைக்கிறார். உண்மையில் பாஜ யாருக்கும் நல்லது செய்யாது. இன்றைக்கு கூட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு அளித்துள்ளனர். 2024ம் ஆண்டு 100 ரூபாய் குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்று பிரதமர் மோடி நிரூபித்து இருக்கிறார். இன்றைக்கு அந்த பெண் சக்தி அவரின் கண்களுக்கு தெரியவில்லையா?
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக கூறி ஒட்டுத்திருட்டு மாதிரி அவர்களின் பணத்தையும் பறிப்பது நியாயமா? 2024ல் பெண்களின் நல்வாழ்வுக்காக காண்பித்த போலி அக்கறை, 2026ல் எங்கே போனது, பாஜவை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள்.
இதை உணர்ந்ததால் தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகை முடக்க நினைத்த சதியை முறியடித்து ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5000 ரூபாய் வழங்கி இருக்கிறோம். அடுத்து வரப்போகும் ஆட்சியில் இந்த தொகையை ரூ.2000 ஆக உயர்த்துவோம் என்று அறிவித்து உள்ளோம். மக்களுக்கு எல்லாவற்றையும் தந்தால் அது திமுக.
மக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால் அது பாஜ. இப்படி யாருக்கும் நன்மை செய்யாத பாஜவா அதிமுகவுக்கு நன்மை செய்ய போகிறது? அதிமுக ரத்தத்தை தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்க போகிறது.
இதில் இபிஎஸ்சுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பீஹாரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை பாஜ பந்தாடியது. இத்தனைக்கும் கடந்த நவம்பரில் தான் தேர்தல் நடந்து அவர் முதல்வர் ஆனார். அதற்குள்ளாக அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. பாஜ சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க இருக்கிறார் என்று ஆதாரத்துடன் தகவல்கள் வருகிறது.
இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதி தான், நாளைக்கு இபிஎஸ்க்கு நடக்கும்.அதற்கு அவர் வெற்றி பெற வேண்டும் அல்லவா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, அதிமுகவில் இபிஎஸ்சுக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக பாஜ தேர்ந்து எடுத்து வைத்துள்ளது.
இபிஎஸ்சை இந்த தேர்தல் வரைக்கும் தான் பாஜ வைத்திருக்கும். அதன் பிறகு அவரை தூக்கி விடுவார்கள். அதுதான் நடக்க போகிறது. ஒருவேளை பாஜவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்பவே அவரை மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு அதிமுக பாஜ கண்ட்ரோலுக்கு போய்விட்டது.
அதிமுக தொண்டர்கள் .ஒட்டுகளை வாங்கி தன்னை வளர்த்துக் கொள்ள பாஜ போட்டிருக்கும் திட்டத்திற்கு ,இபிஎஸ் துணை போயிருக்கிறார். என்டிஏ சார்பில் இப்போது நடைபெறும் தேர்தல் கூட்டங்களை கவனித்தால் நன்றாக தெரியும். அதிமுக கூட்டணி என்று சொல்ல மாட்டார்கள், என்டிஏ கூட்டணி தான் என்று சொல்வார்கள்.
பிரதமர் மோடியே சொல்லமாட்டார். இரண்டு விரல் காட்டும் செய்கையையும் மாற்றி விடுவார்கள். இதை எல்லாம் கவனித்தால் மஹாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போல், பீஹாரில் நிதிஷ்குமாருக்கு நடப்பது போல தமிழகத்தில் இபிஎஸ்சுக்கு நடக்க போகிறது. இதை எல்லாம் முன் கூட்டியே கணித்த காரணத்தால் தான் அதிமுக உண்மை தொண்டர்கள் தாய் கழகமான திமுகவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
2021 தேர்தலில் இருந்தததை விட நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றுள்ளோம். அதனால் தான் வெல்வோம் 200 என்று என்னால் தைரியமாக சொல்ல முடிகிறது. நான் உறுதியாக சொல்கிறேன், திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம். திமுக தான் வெற்றி பெறபோகிறது என்று பாஜவே நினைக்கிறது.
அதனால் தான் நமது பிரசார பீரங்கியாக இருந்த கவர்னரை மாற்றி இருக்கிறது. ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார். கவர்னரை மாற்றாதீர்கள் என்று எத்தனை முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதில் கூட எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டீர்களா? வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாக உழையுங்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக விழாவில் ஓபிஎஸ் பேசியதாவது;
50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும் கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனிசாட்சியுடனும், நன்றியுடனும் நான் பணியாற்றி இருக்கிறேன்.
நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு தனி அணியையோ என்றுமே நான் என்றுமே உருவாக்கியது இல்லை. உருவாக்க வேண்டும் என்று நான் என்றுமே எண்ணியது இல்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, என் கடமையை ஆற்றி வந்திருக்கிறேன்.
எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்று அதிமுகவாக இல்லை. தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் திருத்தக்கூடாத விதி திருத்தப்பட்டது. தொண்டர்கள் உரிமை பறிக்கப்பட்டது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இன்றைக்கு இல்லை.
தனக்காக தனது பதவியை மட்டுமே குறியாக கொண்ட ஒருவரின் ஒரு சுயநல அரசியலால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக மாறியிருக்கிறது. நான் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
என்னை, அன்போடு அழைத்து, பண்போடு பாசம் காட்டி, அரவணைப்பை எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கு வழங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், கழக சட்ட விதியை மாற்றி வட்டமும் போடலாம், தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம், கட்சியையும் கைப்பற்றலாம். ஆனால் வெற்றி பெற முடியுமா என்றால் இல்லை.
தொடர் தோல்விகள் தானே தொடர்கதையாக, அங்கே இருக்கிற சுயநலம் பிடித்த அகம்பாவம் பிடித்தவர்களுக்கு அங்கே இருக்கிறது. இனியும் அவர்களின் தோல்வி அங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 8 தோல்வி, 10 தோல்வி அல்ல... இனி அவர்கள் வாழ்நாள் எல்லாம் தோல்வியை தான் காணப்போகிறார்கள்.
இனியும் அதில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது, திராவிடத்திற்கு மாறானது என்பதை உணர்ந்து தான் 75 ஆண்டுக்கு மேலாக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம்புரளாமல் காத்து வரும் திமுக, அதை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று தாய் கழகத்தில் ஒரு தொண்டனாக தான் இணைத்துக் கொண்டு இருக்கிறேன்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை அண்ணாதுரை கண்ட திமுகவில் இணைப்பதை நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெருமையாக கூறி கொள்கிறேன்.
தமிழகத்தில் தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் என்பது வெறும் பேச்சு. வெற்று பேச்சு. இன்று இங்கு எப்போதுமே திராவிடம் தான் என்பது நமது உயிர்மூச்சு. நம் இணைப்பு சிலருக்கு வெறுப்பை தந்திருக்கிறது. சிலரின் தூக்கத்தையும் கெடுத்து இருக்கிறது.
எதிர் அணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்திருக்கிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற சொல்லை நடைமுறைப்படுத்தியவர், பதறாத பண்பாளர், சிதறாத சிந்தனையாளர், கட்சியை மட்டுமல்ல, ஆட்சியை வழிநடத்துவதிலும் சரி, ஸ்டாலினை போல ஒரு பக்குவப்பட்ட தலைவர் இனி இந்தியாவில் இல்லை.
இந்த 5 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், மாதம்தோறும் உதவித்தொகை, வேலைவாய்ப்புகள் மூலம் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. ஒட்டுமொத்த தமிழகமே உங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.
,இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.
வாசகர் கருத்து (12)
ManiK - ,
07 மார்,2026 - 19:18 Report Abuse
இதுபோல் பேசும் ஸ்டாலினுக்கு அதிமுக அதிவேக அதிரடி பதிலடி கொடுக்க வேண்டும் 0
0
Reply
Arjun - ,இந்தியா
07 மார்,2026 - 19:17 Report Abuse
இந்த அளவுக்கு புலம்ப விட்டுடாங்க பிஜேபி. 0
0
Reply
Ram - ,
07 மார்,2026 - 19:14 Report Abuse
election நெருங்கும் நேரத்தில் இன்னும் இவர்கள் புலம்பல்
அதிகமாகும். 0
0
Reply
பேசும் தமிழன் - ,
07 மார்,2026 - 19:13 Report Abuse
அதிமுகவுக்கு பிஜெபி நியமிக்கும்.... சரி... கான் கிராஸ் கட்சிக்கு தலைவரை.
. தி.மு.க நியமிக்குமா.... அந்தளவுக்கு கான் கிராஸ் கட்சி அடிமை போல் ஆகி விட்டது. 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
07 மார்,2026 - 19:04 Report Abuse
இதே மாதிரி ஒரு புளுகை திரு கெஜ்ரி சொன்னார், பாராளுமன்ற தேர்தலில் - எலக்சன் வரை மட்டுமே மோடி பிரதமர் என்று - அதே போல புளுகுகிறாய் - தோல்வி பயம் முகத்தில் தெரியுது 0
0
Reply
Anand - chennai,இந்தியா
07 மார்,2026 - 19:01 Report Abuse
அவர் தான் என்ன செய்வார், இவரின் பேச்சுக்களை வைத்தே அறிந்து கொள்ளலாம் அவரின் நிலைமையை,.. 0
0
Reply
sakthivel - CHENNAI,இந்தியா
07 மார்,2026 - 18:54 Report Abuse
நீங்க bjp கூட கூட்டணி வைக்க வில்லையா admk கூட்டணி வைத்தால் இப்படி பேசுவீர்களா முதலஅமைச்சர் பதவியிலிருந்து மக்கள் மாற்றுவார்கள் 0
0
Reply
ஜூவி - ,
07 மார்,2026 - 18:47 Report Abuse
இந்த துரோகிக்கு தேர்தல் முடிவு சொல்லும் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
07 மார்,2026 - 18:42 Report Abuse
ஜோசியம் பார்க்கிறாராம், 0
0
Reply
சுரேஷ் பாபு - ,
07 மார்,2026 - 18:41 Report Abuse
ஏன் சார், உங்களுக்கும் உங்க புள்ளைக்கும் எம் எல் ஏ சீட் வேணும்கறதுக்கு இந்த அளவுக்கு துதி பாடணுமா? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் - அம்மா ஜெயலலிதா அவர்களை சட்டசபையில் பெண் என்றும் பாராமல் இழிவு செய்த கட்சியின் அடிவருடி ஆகி விட்டீர்களே. 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பெண்மை போற்றுதும்
-
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துங்கள்; லண்டனில் அமெரிக்க தூதரகம் நோக்கி 5000 பேர் பேரணி
-
நைஜீரியாவில் 300 கிராமவாசிகள் கடத்தல்; ஐ.எஸ்., அட்டூழியம்
-
அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
Advertisement
Advertisement